தோனி ரோகித்தை ஒதுக்கி..கோலி பும்ராவுக்கு கம்பீர் தந்த மாஸ் பட்டம்.. வித்தியாச சுவாரசிய தேர்வுகள்

0
149
Gambhir

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெல்லி பிரிமியர் லீக்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கம்பீர் வேடிக்கையான ஒரு பேட்டியில் இந்திய வீரர்களை சில பாலிவுட் பட்டப் பெயர்களுக்கு தேர்ந்தெடுத்தார். அதில் விராட் கோலியை யை சிறப்பு பட்டத்திற்கு தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தினார்.

அதே சமயத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோரை எந்த பட்டப்பெயருக்கும் கம்பீர் தேர்ந்தெடுக்கவில்லை. மேலும் ஒரு பட்டப் பெயருக்கு தன்னைத்தானே தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விராட் கோலி – கவுதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட்டின் உள் மட்டத்தில் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வருவதற்கான வேலைகள் ஆரம்பித்ததுமே கம்பீர் தன்னுடைய பேச்சு மற்றும் பழைய சச்சரவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ஆரம்பித்தார்.

இதில் ஒரு முக்கிய விஷயமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஆர்சிபி கேகேஆர் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த விராட் கோலியிடம் கம்பீர் தானே சென்று பேசி ஏற்கனவே இருந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிறகு அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு விராட் கோலியின் அவரும் பழைய விஷயங்களை மறந்து நல்ல நட்பு பாராட்டி வருவதை பார்க்க முடிந்தது.

- Advertisement -

விராட் கோலி ஷாஹேன்ஷா

நேற்று கம்பீர் டெல்லி பிரிமியர் லீக் தொடரில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பாலிவுட்டில் இருக்கும் பட்டப் பெயர்களை இந்திய கிரிக்கெட் அணியில் யாருக்கு பொருத்தினால் சரியாக இருக்கும் என ஐந்து பட்ட பெயர்கள் வைத்து கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படிங்க : பங்களாதேஷ் நியூசி டெஸ்ட்.. லயன் மெக்ராத் பிரம்மாண்ட சாதனையை உடைக்க அஸ்வினுக்கு வாய்ப்பு.. ரெக்கார்டு மாறுமா?

இதில் பாட்ஷா என்ற பட்டத்திற்கு யுவராஜ் சிங்கையும், அச்சம் அற்றவர் என்ற பொருள் தரும் தபாங் எனும் பட்டத்திற்கு சச்சினையும், ஆங்கிரி யங் மேன் பட்டத்திற்கு தன்னையும், அரசருக்கெல்லாம் அரசர் எனப் பொருள் தரும் ஷாஹேன்ஷா பட்டத்திற்கு விராட் கோலியையும், மிகவும் முக்கியமானவர் எனும் கிலாடி பட்டத்திற்கு பும்ராவையும் கம்பீர் தேர்ந்தெடுத்தார். இதில் பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் ரோகித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனியை அவர் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -