இந்தியா கைகுலுக்காதது.. தயவு செய்து கருணை காட்டுங்க.. உங்கள பத்தி நல்லது தானே சொல்றோம் – அக்தர் வேண்டுகோள்

0
545
Akthar

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காதது குறித்து சோயப் அக்தர் மிகவும் வருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

நேற்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி ஆசிய கோப்பை தொடரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. போட்டியை முடித்த பிறகு கேப்டன் சூரியகுமார் மற்றும் சிவம் துபே இருவரும் கைகுலுக்காமல் நேரடியாக உள்ளே சென்று விட்டார்கள். பயிற்சியாளர்கள் உட்பட மற்ற இந்திய வீரர்களும் கைகுலுத்த வரவில்லை.

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு

சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீரில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுக்காக இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கை கொடுக்காமல் சென்றார்கள். தற்போது இதுகுறித்து இரு பக்கத்திலும் எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி கொண்டிருக்கிறது.

இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்திருக்கலாம், இந்திய அணி பங்கேற்காவிட்டால் இந்த தொடரை நடந்திருக்காது, இப்படி இருக்கும் பொழுது கலந்து கொண்ட இந்திய அணி முழுதாக மரபை பின்பற்றி இருக்க வேண்டும் என பலர் கருத்து கூறியும் வருகிறார்கள்.

- Advertisement -

கருணை காட்டுங்கள்

இது குறித்து சோயப் அக்தர் பேசும்பொழுது “எனக்கு வார்த்தைகள் வரவில்லை. என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. இதைப் பார்க்க எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. தயவு செய்து விஷயங்களை அரசியலாக மாற்ற வேண்டாம். வெற்றி பெற்ற இந்தியாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”

இதையும் படிங்க : பாகிஸ்தான் தோல்வியை என்னால ஜீரணிக்க முடியலை.. எங்க கேப்டன் கூட அதே தப்ப செய்றாரு – வாசிம் அக்ரம் வருத்தம்

“கிரிக்கெட் போட்டியை அரசியலாக மாற்றாதீர்கள். நாங்கள் உங்களைப் பற்றி நல்லவிதமாகவே சொல்லி வருகிறோம். சண்டை என்பது உங்கள் வீட்டிலும் வரும். இதையெல்லாம் மறந்து விடுங்கள். கைகுலுக்காததை பற்றி நிறைய பேசலாம் ஆனால் நான் விரும்பவில்லை. இது கிரிக்கெட் விளையாட்டு. நீங்கள் கைகுலுக்கி உங்கள் கருணையை காட்டுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -