அமெரிக்காவுல தேவைப்படல உண்மைதான்.. ஆனா இங்க இவங்க 2 பேர்ல கண்டிப்பா 1 ஆள் இருப்பாங்க.. டிராவிட் பேட்டி

0
62

இன்று நடைபெற உள்ள முக்கியமான சூப்பர் 8 ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெஸ்ட் இண்டீஸில் உள்ள பாரபடஸ் மைதானத்தில் மோத உள்ளன.

இன்று நடைபெற உள்ள போட்டியில் அணிக்கு தேவையான மாற்றங்கள் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ராகுல் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அற்புதமான மூன்று வெற்றிகளை பெற்று, நான்காவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதோடு மொத்தமாக 7 புள்ளிகளை பெற்று குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை பெற்றது. இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில் இன்று பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் மைதானத்தில் சூப்பர் 8 போட்டி நடைபெற இருக்கிறது. இந்த சுற்றில் மொத்தம் இந்திய அணிக்கு மூன்று ஆட்டங்கள் உள்ளன.

முதல் போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும, இரண்டாவது போட்டி வங்கதேச அணிக்கு எதிராகவும், மூன்றாவது போட்டி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டிக்காக இந்திய அணியினர் மிக தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அணித்தேர்வை மேற்கொண்ட இந்திய அணி அதுவே வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் கால சூழ்நிலை வேறாக இருப்பதால் அதற்குத் தகுந்தவாறு அணித்தேர்வில் நிச்சயமாக மாற்றங்களும் மேற்கொள்ளும்.

- Advertisement -

சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளங்களில் ரிஸ்ட் ஸ்பின்னர்களின் தேவை அதிக கவனம் பெறுவதால் இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோரில் ஒருவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் போட்டி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். இது குறித்து டிராவிட் கூறும் பொழுது “எந்த ஒரு வீரரையும் வெளியேற்றுவது கடினம்.
நியூயார்க் ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தன.

அதனால் அங்கு வேகப்பந்துவீச்சாளர்களின் தேவை இருந்தது. ஆனால் இங்குள்ள சூழ்நிலை சற்று வித்தியாசமானது. சகால் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவர் கண்டிப்பாக பயன்படுத்தப்படும். நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஆல் ரவுண்டர் திறமைகளோடு சேர்த்து எங்களிடம் எட்டு பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர் மேலும் ஏழு பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு சூழ்நிலையும் தனித்தன்மை வாய்ந்தது.

இதையும் படிங்க:76/5 டு 176/7.. கடைசி வரை பயம் காட்டிய அமெரிக்கா ஜோடி.. காப்பாற்றிய ரபாடா.. தென் ஆப்பிரிக்கா முதல் வெற்றி

நெகிழ்வுத் தன்மையோடு இருக்க வேண்டியது அவசியம். பாகிஸ்தான் ஆட்டத்தில் அக்சாரை மேலே அனுப்பி பேட்டிங் செய்ய வைத்தது, பண்ட் இந்த தொடரில் மூன்றாவது வரிசையில் களமிறங்கி விளையாடுவது என அனைத்துமே அந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றம் செய்யப்படுகின்றன” என்ற டிராவிட் கூறியிருக்கிறார்.

- Advertisement -