இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அரை சதம் அடித்தவுடன், இந்த தொடரில் மூன்று அரை சதங்களை அடித்த இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்த தொடருக்கு முன்பாக சூரியகுமார் யாதவ் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருந்து வந்தது. அது அணியையும் பாதித்தது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடர்க்கும் முன்பாக அவர் பேட்டிங் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது இருந்தது. இந்த நிலையில் தொடர் நாயகன் விருதை வென்றது குறித்து சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.
காத்துக் கொண்டு இருந்தேன்
இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “ஒரு நீண்ட வருடமாக இப்படிப்பட்ட ஒரு தருணம் எப்பொழுது வரும் என நான் காத்துக் கொண்டு இருந்தேன். இப்படிப்பட்ட ஒரு நிகழ்வுக்காக நான் கனவு கண்டு கொண்டு இருந்தேன். நான் இதற்கு முன்பு என்ன செய்தேனோ அதையே தான் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன்”
“இதற்காக நான் எதையுமே மாற்றக் கிடையாது. எனக்கு பார்ம் இருக்கிறது ரன்கள்தான் வரவில்லை என்று நன்றாகவே தெரியும். இந்தத் தொடர் எனக்கு சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்த மனநிலையுடன் டி20 உலகக் கோப்பை தொடருக்கு செல்வது சிறப்பானது”
பவுலர்களுக்கு கடினமானது
“இந்த வடிவம் பவுலர்களுக்கு கடினமானது என்று நான் அறிவேன். இதை நான் முழுமையாக புரிந்து வைத்திருக்கிறேன். நீங்கள் பெரிய ஸ்கோர் எடுக்கும் பொழுது எதிரணியும் பெரிய அளவில் தாக்கி விளையாடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : எங்க டீம்ல எல்லாருக்கும் ஒரு உத்தரவு இருக்கு.. நான் இன்னும் முழுசா அதை பண்ணல – இஷான் கிஷான் பேச்சு
“இங்கு எல்லாமே ஒரு கற்றல் செயல்பாடுதான். நாங்கள் இங்கு சிறப்பான முறையில் கற்றுக் கொண்டிருக்கிறோம். இதைத்தொடர்ந்து எங்களுக்கு மும்பையில் தென் ஆப்பிரிக்காவுடன் ஒரு பயிற்சி போட்டி இருக்கிறது. அங்கு சென்று மேலும் நாங்கள் இன்னும் என்னென்ன சரி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்” என்று கூறி இருக்கிறார்.






