எல்லாம் டி20 உலக கோப்பையில் ஆரம்பிச்சது.. நாங்க இனி அந்த தப்பை மட்டும் செய்ய மாட்டோம் – சூரியகுமார் யாதவ் பேச்சு

0
179
Surya

இந்திய அணி நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் வென்று தொடரை கைப்பற்றியது. தற்போது இந்தியா டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் சூரியகுமார் யாதவ் இந்திய அணி எப்படி இனி செயல்படும் என்பது குறித்து பேசி இருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோற்றது. இந்த தோல்விக்கு பேட்டிங்கில் அதிரடியாக மொத்த அணியும் சேர்ந்து விளையாடாதது காரணமாக அமைந்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டில் தாக்குதல் பாணியை ரோகித் சர்மா தலைமையிலான குழு அறிமுகப்படுத்தியது. அணியின் பேட்டிங் வரிசையில் எல்லோரும் மிகவும் தைரியமாகவும் ஆக்ரோஷமாகவும் விளையாடுவது என முடிவு செய்யப்பட்டு அப்படியே விளையாடினார்கள்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர்களில் இந்த தாக்குதல் பாணி பேட்டிங் அணுகுமுறையை வெளிப்படுத்தி சிறப்பாக செய்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது ” டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்த ட்ரெண்ட் தொடங்கியது. நாங்கள் இரண்டு மூன்று வீரர்கள் என தனியாக எந்த விஷயத்திற்கும் அமர மாட்டோம் என்று முடிவு செய்தோம். சூழ்நிலை நன்றாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி நாங்கள் மொத்த அணியினரும் ஒன்றாகவே அமர்வோம்.இது எங்களின் அணியின் பிணைப்புக்கு நிறைய உதவியது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஓய்வு ஓகே.. ஆனா உங்களுக்கு பிட்னஸ் இல்லனா.. திரும்ப டீம்க்கு வர முடியாது.. கம்பீர் வீரர்களுக்கு நேரடி எச்சரிக்கை

ரோகித் சர்மா தலைமையில் கடந்த டி20 உலக கோப்பை தொடரில் எந்த ஒரு விஷயத்திற்கும் மொத்த அணியினரும் சேர்ந்து இருந்து விஷயங்கள் குறித்து விவாதித்து தெரிந்து கொண்டார்கள். இந்த கலாச்சாரம் இனி அணியில் எப்பொழுதும் தொடரும் என சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.

- Advertisement -