ரியான் பராக்குக்கு ஓவர் தர காரணம் இதுதான்.. உலக கோப்பையில் நடந்த ஒரு விஷயம் உதவுச்சி – சூரியகுமார் பேட்டி

0
4548
Surya

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி இன்று 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் ஆட்டநாயகன் விருது வென்று வெற்றிக்கான காரணங்கள் குறித்து பேட்டியளித்தார்.

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் 16 பந்தில் 34 ரன்கள், ஜெய்ஸ்வால் 21 பந்தில் 40 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தார்கள். மேற்கொண்டு இந்தியன் கேப்டன் சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் அதிரடியாக 58 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. பதிரனா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 140 ரன்கள் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வலிமையான இடத்தில் இருந்தது. இதற்குப் பிறகு 9 விக்கெட்டுகளை வெறும் 30 ரன்களுக்கு பறிகொடுத்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் அக்சர் படேல் மற்றும் அர்ஸ்தீப் சிங் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். ரியான் பராக் மொத்தமாக எட்டு பந்துகள் மட்டும் வீசி மூன்று விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இந்த போட்டியில் கேப்டன் சூர்யா குமார் யாதவ் பிரதான வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நான்கு ஓவர் மீதம் இருந்த பொழுது, 17ஆவது ஓவரை இளம் பகுதி நேர ஆப் ஸ்பின்னர் ரியான் பராக் இடம் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். அவர் 1.2 ஓவர் மட்டும் பந்துவீசி இரண்டு ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அவர் பங்குக்கு ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இது குறித்து கூறும் பொழுது “இலங்கை பேட்ஸ்மேன்கள் முதல் பந்தில் இருந்து நல்ல பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடினார்கள். அவர்கள் நல்ல டெம்போவில் இருந்தார்கள். இதற்கான கிரெடிட் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் உலக கோப்பையில் நாங்கள் விளையாடி வந்த அனுபவம் ஆட்டம் இன்னும் வெகு தூரத்தில் இருப்பதை நினைவூட்டியது.

இதையும் படிங்க : நல்லவேளை 240 ரன் அடிச்சிருப்பாங்க .. இது வெறும் பரிசோதனை தான் – இலங்கை கேப்டன் அசலங்கா பேட்டி

மேலும் இரவில் விக்கெட் எப்படி செயல்படும் என்பதும் எங்களுக்கு தெரியும். (இதனால் ரியான் பராக் பந்து வீசினார்). மேலும் பனிப்பொழிவு இல்லாதது எங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. ரைட் லெப்ட் காம்பினேஷன் பேட்டிங்கில் வேண்டுமா என்பது, அணிக்கு நல்ல முறையில் எது பலன் கொடுத்தாலும் அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -