நல்லவேளை 240 ரன் அடிச்சிருப்பாங்க .. இது வெறும் பரிசோதனை தான் – இலங்கை கேப்டன் அசலங்கா பேட்டி

0
3026

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த தோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 40 ரன்கள், கில் 16 பந்துகளில் 34 ரன்கள், கேப்டன் சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் 58 ரன்கள், பண்ட் 33 பந்துகளில் 49 ரன்களும் குவித்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் இலங்கை அணி தரப்பில் பத்திரானா நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்கம் இலங்கை அணிக்கு மிகச் சிறப்பாக அமைந்த போதிலும், பின்னால் வந்த பேட்ஸ்மேன்ள் அதை சரியாக பயன்படுத்தாத காரணத்தால் இலங்கை அணியால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரர் நிஷான்கா 48 பந்துகளில் சிறப்பாக விளையாடி ஏழு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 79 ரன்கள் குவித்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குஷால் மெண்டிஸ் 27 பந்துகளில் 45 ரன்கள் குவித்து வெளியேறினார். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு எட்டு ஓவர்களில் 84 ரன்கள் குவித்தனர். ஆனால் பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் இலங்கை அணி 19.2 ஓவர்களில் 170 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த தோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா கூறும்பொழுது “நாங்கள் பந்து வீசும் போது பவர் பிளேவில் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் அதற்குப் பிறகு பிற்பகுதியில் மிகவும் வலுவான முறையில் திரும்பி வந்தோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர். இந்திய அணியின் பேட்டிங்கை பார்த்தபோது சில கட்டத்தில் அவர்கள் 240 ரன்கள் வரை குவிக்கலாம் என்று நினைத்தோம். எங்களது பேட்டிங்கில் தொடக்கம் அருமையாக இருந்தது.

இதையும் படிங்க:IND vs SL: ஒரே ஓவரில் 2 கைகளில் பந்து வீசிய இலங்கை கமிந்து மென்டிஸ்.. ஐசிசி விதி கூறுவது என்ன.?

ஆனால் மிடில் வரிசையில் எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை. அந்த விதத்தில் கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் இது ஒரு பரிசோதனை முயற்சி.(6 பேட்ஸ்மேன் 5 பவுலர்கள் காம்பினேஷன்) எதிர்காலத்தில் நாம் செல்ல வேண்டிய வழியும் இதுதான். எனவே அடுத்த போட்டியில் மிகவும் வலுவாக திரும்பி வருவோம்” என்று கூறியிருக்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -