இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடுகிறது. இன்று இந்த தொடரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்திய டி20 அணிக்கு முழு நேர கேப்டனாக முதல் முறையாக பொறுப்பேற்றுள்ள சூரியகுமார் யாதவ் இந்த வெற்றி குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 24 பந்தில் 32 ரன்கள், குசால் பெரேரா 34 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் ரவி பிஸ்னாய் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து இந்திய அணி விளையாட வந்த பொழுது தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஒரு கட்டத்தில் போட்டி நடக்குமா? என்கின்ற சந்தேகமும் இருந்தது. இவர்களில் ஒருவழியாக மழை நிற்க போட்டி எட்டு ஓவர் கொண்டதாக மாற்றப்பட்டது. மேலும் இந்திய அணிக்கு இலக்கு 78 ரன்கள் என்று கொடுக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 15 பந்தில் 30 ரன்கள், கேப்டன் சூரியகுமார் யாதவ் 12 பந்தில் 26 ரன்கள், ஹர்திக் பாண்டியா 9 பந்தில் 22* ரன்கள் எடுக்க, இந்திய அணி 6.3 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டியில் வென்று தொடரையும் கைப்பற்றிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “இந்த போட்டிக்கு முன்பாக நாங்கள் எந்த பிராண்ட் கிரிக்கெட் விளையாட போகிறோம் என்பது குறித்து பேசினோம். இது ஒரு குறுகிய இலக்காக இருந்தாலும் கூட, நாங்கள் முன்னேறி செல்ல விரும்பினோம். இதுதான் நாங்கள் விளையாடப் போகும் டெம்ப்ளேட். மேலும் மழை இருக்கும் வானிலையில் 150 முதல் 160 ரன்கள் துரத்துவதற்கு நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க : 31 ரன் 7 விக்கெட்.. 6 ஓவரில் மேட்சை முடித்த இந்தியா.. தொடரையும் கைப்பற்றியது.. இலங்கை அணி பரிதாப தோல்வி
மேலும் இங்கு விளையாட்டுக்கள் தந்திரமாக இருப்பதை பார்த்தோம். அதே சமயத்தில் எங்களுக்கு மழை உதவி செய்திருக்கிறது. எங்களுடைய வீரர்கள் பேட்டிங் செய்த விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. தொடரை வென்று விட்டதால் அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? என்பது குறித்து நாங்கள் உட்கார்ந்து பேசி முடிவு செய்வோம்” என்று கூறினார். இந்தப் பேட்டியில் “எங்களுக்கு அதிர்ஷ்டமும் கொஞ்சம் இருக்க வேண்டும், மேலும் மலையும் எங்களை கொஞ்சம் ஆசீர்வதிக்க வேண்டும்” என நகைச்சுவையாக முடித்தார்.