இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி ஆறு ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அவ்வாறு வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்த போட்டிக்கான டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் வந்து பிச்சை தேர்வு செய்தார். இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் குசால் மெண்டிஸ் 11 பந்தில் 10 ரன்கள், பதும் நிஷாங்கா 24 பந்தில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வந்த குசால் பெரேரா சிறப்பாக விளையாடி 34 பந்தில் ஆறு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர் உடன் 53 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ் 23 பந்தில் 26 ரன்கள் எடுத்தார்.
ஒரு கட்டத்தில் இலங்கையணி 180 ரன்கள் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்டம் போலவே கடைசி கட்டத்தில் இக்கட்டுகள் கொத்தாக விழுந்தன. கடைசி 31 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒன்பது விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் ரவி பிஸ்னாய் 3, அக்சர் படேல் 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
தொடர்ந்து விளையாட இந்திய அணி வந்த பொழுது மழை கடுமையாகப் செய்தது. இதனால் எட்டு ஓவருக்கு 78 ரன்கள் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் 12 ரன்கள் எடுக்க, தீக்ஷனா வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் கோல்டன் டக் ஆனார்.
இதைத் தொடர்ந்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக 12 பந்தில் நான்கு பவுண்டரி ஒரு சிக்சர் உடன் 26 ரன்கள் எடுத்தார். அடுத்து ஜெய்ஸ்வால் தன் பங்குக்கு 15 பந்தில் மூன்று பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்களுடன் 30 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 9 பந்தில் 22 ரன்கள் எடுக்க, இந்திய அணி 6.3 ஓவரில் மூன்று விக்கெட்டை இழந்து 81 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : இலங்கை அணி தகுதி இல்லாதது.. அவர்கள் விளையாட்டு வீரர்கள் போலவே இல்லை – சல்மான் பட் விமர்சனம்
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்ற காரணத்தினால் தொடரையும் வென்றிருக்கிறது. நாளை மறுநாள் மூன்றாவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இதில் சில விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்.