கம்பீர் அவருக்கு மட்டும் ஏன் அநியாயம் பண்றீங்க.. இந்திய டீம்ல இது நியாயமில்ல – ஆகாஷ் சோப்ரா வருத்தம்

0
635
Aakash

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றியை நோக்கி இந்தியா விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் என ஆகாஷ் சோப்ரா முக்கிய இந்திய வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

ரவி பிஸ்னாய்க்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் என கலவையான அணியை தேர்வு செய்து தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டது. மேலும் பகுதி நேர பந்துவீச்சாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் பராக் ஆகியோரும் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதில் சுழற் பந்துவீச்சாளர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இருக்கும் நிலையில், வருண் சக்கரவர்த்தி மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் கடந்த டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரவி பிஷ்னாய்க்கு தற்போதைய போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்த இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா கேள்வி

இதுகுறித்து அவர் கூறும் போது “ரவி பிஷ்னாய் விளையாட தொடங்கியதிலிருந்து இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் பட்டியலை பார்த்தால் ரவி பிஷ்னோவின் ஆட்டம் சிறப்பாக இருந்திருப்பதை காண முடியும். அர்ஷ்தீப் சிங் நம்பர் ஒன் பொசிஷனில் இருந்தாலும், பிஷ்னோய் வெகு தொலைவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. யாரையாவது கைவிட வேண்டும் என்றால் அவர்தான் கைவிடப்படுகிறார். இதில் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் எந்த லெக் ஸ்பின்னரும் நியாயமாக நடத்தப்படவில்லை.

இன்று வரை எந்த உலகக் கோப்பையிலும் யுவேந்திர சகாலுடன் விளையாடியது இல்லை. அவர் அணியில் இருந்தாலும் விளையாட மாட்டார். அதேபோல ரவி பிஷ்னாய் சிறப்பாக செயல்பட்டாலும் நாங்கள் அவரை விளையாட வைப்பதில்லை. வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் வருண் சக்கரவர்த்தி தான் முதலில் விளையாடினார். இன்னும் ரவி பிஷ்னாய் விளையாடவில்லை. மூன்று வருடங்கள் கழித்து யாராவது அணிக்கு திரும்பி, அவர் விளையாட முடியும் என்றால் ரவி பிஷ்னாய்க்கு என்ன நியாயம் சொல்வது.

இதையும் படிங்க : இதெல்லாம் நல்லதுக்கே கிடையாது.. ஒரே ஒரு வாய்ப்பு வந்தது அதையும் எடுத்துக்கிட்டாங்க – நஜ்முல் சாந்தோ பேட்டி

அணித்தேர்வு என்பது 15 பேர் கொண்டது மட்டுமல்ல. மேலும் விளையாடும் 11 பேரை பொறுத்தது. 15 பேரில் ஒருவர் தேர்ந்தெடுத்து இருந்தால், அவர் நீதிக்காக விளையாட வேண்டும் என்று சொல்லும் நிலையில் ஒரு மனிதனின் இழப்பு என்பது மற்றொரு மனிதனின் வாய்ப்பாக மாறுகிறது. ஒருவர் மட்டும் அந்த இழப்பினை தாங்கிக் கொண்டால், அவன் நான் மட்டும் ஏன் என்று தான் கேட்பான்? ” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -