இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி 76 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.
தோற்றது இங்குதான்
இந்த தோல்வி குறித்து பேசி உள்ள சூரியகுமார் யாதவ் ” நாங்கள் முதலில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு. பவர் பிளேவில் மூன்று விக்கெட் கைப்பற்றினோம். நடுவில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். தொடர்ந்து நாங்கள் இறுதி ஓவர்களில் மீண்டும் சிறப்பாக வந்து அவர்களை கட்டுப்படுத்தினோம். இந்த எல்லா நேரங்களிலும் ஆட்டம் எங்கள் பக்கமே இருந்தது”
“அதே சமயத்தில் நாங்கள் சிறப்பான முறையில் பேட்டிங் செய்யவில்லை. ஒரு போட்டியில் நீங்கள் பவர் பிளேவில் வெல்ல முடியாது. ஆனால் பவர் பிளேவில் தோல்வியடைய முடியும். நாங்கள் பவர் பிளேவில் அதிக விக்கெட் இழந்ததுதான் தோல்வி அடைவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது”
நாங்கள் திரும்பி வருவோம்
” எங்களுக்கு எப்பொழுதும் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் பந்து வீச்சில் தரும் தொடக்கம் மிகவும் முக்கியமானது. இவர்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு கூட்டணி. இன்று கூட எட்டு ஓவர்கள் பந்து வீசி 40, 50 ரன்கள்தான் கொடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவில்லை”
இதையும் படிங்க: தெ.ஆ கேப்டன் ஆச்சரிய முடிவு.. இந்தியா கழட்டிவிட்ட முக்கிய வீரர்.. சூர்யா சொன்ன புது தகவல் – டாஸ் நிகழ்வில் என்ன நடந்தது?
“அடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி இருக்கிறது. நாங்கள் உட்கார்ந்து இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவான திட்டங்கள் தீட்டி வருவோம். அதே சமயத்தில் நாங்கள் பெரிதான மாற்றங்கள் எதையும் செய்து கொள்ள மாட்டோம். இதைவிட வலிமையாக திரும்பி வருவோம்” என்று கூறியிருக்கிறார்.






