நாங்க பண்ணது பரிசோதனை.. இருந்தாலும் ஏமாற்றமா இருக்கு.. இந்த 2 விஷயம் மட்டுமே நம்பிக்கை – கில் பேச்சு

0
226
Gill

இன்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த தொடரை இழந்தது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் தற்காலிக சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

நியூசிலாந்து வெற்றி

முதலில் பேட்டிங் செய்த டேரில் மிட்சல் 137 ரன், கிளன் பிலிப்ஸ் 106 ரன் குவித்தார்கள். இந்த ஜோடி 186 பந்துகளில் 219 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. நியூசிலாந்து அணி ஐம்பது ஓவர்களில் எட்டு விக்கெட் 337 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு கடைசி வரையில் போராடிய விராட் கோலி 124 ரன்கள் குவித்தார். இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கடைசியில் அற்புதமாக விளையாடிய ஹர்ஷித் ராணா 52 ரன்கள், நிதீஷ் குமார் ரெட்டி 53 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி இறுதியாக 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

- Advertisement -

இந்த இரண்டு விஷயம் சாதகம்

இந்தத் தோல்வி குறித்து சுப்மன் கில் பேசும்பொழுது “நாங்கள் இந்த போட்டிக்கு வரும் பொழுது தொடர் சமநிலையில் இருந்தது. அந்த இடத்திலிருந்து நாங்கள் தொடரை இழந்தது ஏமாற்றமாக இருக்கிறது. நாங்கள் இன்றைய போட்டியில் செயல்பட்ட விதம் சரியாக இல்லை. நாங்கள் மீண்டும் சில விஷயங்களை பார்த்து சரியாக செயல்பட வேண்டியது இருக்கிறது”

இதையும் படிங்க : ரோகித் விராட் இரட்டை சதம் அடிக்க வேண்டும்.. டேரில் மிச்சல் வைத்த புது செக்.. ஸ்பெஷல் சாதனையுடன் ரன் குவிப்பு

“இந்த தொடரில் நல்ல விஷயங்கள் என்று பார்க்கும் பொழுது விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது பெரிய பலம். இதே போல ஹர்ஷித் ராணா பேட்டிங் எங்களுக்கு பலம். மேலும் வேகப் பந்து வீச்சும் நன்றாக இருந்தது. இத்துடன் உலக கோப்பையை மனதில் வைத்து நிதீஷ்குமார் ரெட்டிக்கு நாங்கள் அதிக வாய்ப்பு தர வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் அவரை அதிகம் பந்து வீசவைக்க வேண்டி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -