ஜெய்ஸ்வால் அபிஷேக் ஓபனிங் வருவார்களா?.. வேலை இன்னும் முடியல அதை முடிக்கணும் – சுப்மன் கில் பேட்டி

0
108
Gill

இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக வென்று சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் துவக்க வீரராக வந்து அரை சதம் அடித்து வெற்றிக்கு பங்களிப்பு செய்த கேப்டன் சுப்மன் கில் வெற்றி பற்றி பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து இரண்டு போட்டிகள் போல் இல்லாமல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதே சமயத்தில் ஜிம்பாப்வே அணி சிறப்பாக ஆரம்பித்து தொடக்க விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

மேற்கொண்டு சுதாரித்த இந்திய பந்துவீச்சாளர்கள் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் என்று ஜிம்பாப்வே அணியைச் சிறப்பாக கட்டுப்படுத்தினார்கள். அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். கலீல் அகமது தன்னுடைய இரண்டாவது ஸ்பெல்லில் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் கில் 39 பந்துகளில் 58 ரன்கள், ஜெய்ஸ்வால் அதிரடியாக 53 பந்தில் 93 ரன்கள் குவித்தார்கள். இந்திய அணி விக்கெட் இழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் 15. 2 ஓவரில் வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

இந்த வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் கில் “நாங்கள் முதல் போட்டியில் சேஸ் செய்து தோல்வி அடைந்திருந்தோம். எனவே சேஸ் செய்வது குறித்து நாங்கள் பேசினோம். ஆனால் இது மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. தற்பொழுது தொடரைக் கைப்பற்றி இருந்தாலும்,இன்னும் எங்களுடைய வேலை முடியவில்லை. ஜிம்பாப்வே சிறந்த ஒரு அணி. நாங்கள் எங்கள் அணியை இன்னும் முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறோம். மேலும் மாற்றம் இருக்குமா என்று பயிற்சியாளர் உடன் பேசவில்லை. இருந்தால் அடுத்த போட்டியில் டாசில் சொல்வேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : திடீர்னு அந்த விஷயம் மாறுச்சு.. உடனே சுதாரிச்சு இப்படி பிளானை மாத்திட்டேன் – ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் பேட்டி

தற்போது இந்த அணியில் எதிர்கால இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் யார்? என்பதற்கான பெரிய போட்டி நடைபெறுகிறது. மொத்தம் நான்கு துவக்க ஆட்டக்காரர்கள் இந்த அணியிலும் பிளேயிங் லெவனிலும் இடம்பெற்று இருக்கிறார்கள். நாளை அனைவரும் எதிர்பார்க்கும் அபிஷேக் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் துவக்க ஜோடியாக வருவார்களா? என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -