திடீர்னு அந்த விஷயம் மாறுச்சு.. உடனே சுதாரிச்சு இப்படி பிளானை மாத்திட்டேன் – ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் பேட்டி

0
334
Jaiswal

இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நான்காவது போட்டியை வென்று, தொடரை 3-1 எனக்கு கைப்பற்றி இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இறுதிவரை களத்தில் நின்று 93 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வாங்கி, தன்னுடைய பேட்டிங் திட்டம் குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. ஜிம்பாப்வே அணி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆரம்பித்தது. ஆனாலும் இந்திய பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி அவர்களைக் கட்டுப்படுத்தினார்கள்.

- Advertisement -

ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன் சிக்கந்தர் ராஸா 28 பந்துகளில் அதிரடியாக 46 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் கலீல் அகமது இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி விக்கெட் இழக்காமல் 15.2 ஓவரில் இலக்கை எட்டி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கில் 39 பந்தில் 58 ரன்கள், ஜெய்ஸ்வால் 53 பந்தில் 93 ரன்கள் எடுத்தார்கள்.இந்திய அணிக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இது இரண்டாவது பத்து விக்கெட் வெற்றியாகும்.

- Advertisement -

வெற்றிக்குப் பின் ஆட்டநாயகன் விருது வென்ற ஜெய்ஸ்வால் பேசும் பொழுது “இன்று நான் என்னுடைய டேட்டிங் ரசித்து விளையாடினேன். மேலும் வெவ்வேறு பந்துவீச்சாளர்களுக்கு வெவ்வேறு திட்டங்களையும் வைத்திருந்தேன். பந்து புதியதாக இருக்கும் பொழுது பேட்டிங் செய்ய வசதியாக வந்தது. பழையதாக மாறியதும் நின்று வந்தது. உடனே சுதாரிப்பு இதற்கு தகுந்தபடி என்னுடைய பேட்டிங் திட்டத்தை மாற்றிக் கொண்டேன்.

இதையும் படிங்க: 156 ரன் நாட் அவுட்.. கில் ஜெய்ஸ்வால் நங்கூர பேட்டிங்.. இந்தியா தொடரை கைப்பற்றியது.. ஜிம்பாப்வே அணி தோல்வி

மேலும் கில் உடன் பேட்டிங் செய்வதை ரசித்து நான் விளையாடினேன். ஆரம்பத்தில் தாக்கி விளையாடி ரன்கள் எடுக்க நினைத்தேன்.இன்னிங்ஸ் பில்டப் ஆகி தொடர்ந்து செல்லும் பொழுது, இறுதிவரை நின்று ஆட்டத்தை முடிப்பது குறித்து யோசித்தேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -