200 ரன் அடிக்க முடியாம போனதுக்கு காரணம் நானா?.. அங்க நடந்தது உண்மையா இதுதான் – சுப்மன் கில் பேட்டி

0
641
Gill

சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி தற்பொழுது ஜிம்பாப்வே நாட்டில் அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. போட்டியின் முடிவுக்குப் பிறகு வெற்றிக்கான காரணங்கள் குறித்து கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக விளையாடிய 49 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். மேலும் டி20 உலக கோப்பையில் விளையாட வாய்ப்பு பெறாத ஜெய்ஷ்வால் இந்த போட்டியில் விளையாடி 28 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்திய அணி முதல் நான்கு ஓவர்களில் 40 ரன்கள் தாண்டி வேகமாக விளையாடியது. எனவே இந்திய 200 ரன்கள் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாவது போட்டியில் 234 ரன்கள் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கடுத்து விளையாட வந்த ஜிம்பாப்வே அணி ஏழு ஓவர்களில் வெறும் 39 ரன்கள் மட்டுமே எடுத்து முக்கிய ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதற்கு அடுத்து விக்கெட் கீப்பர் மடண்டா 26 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். டியான் மேயர்ஸ் ஆட்டம் இழக்காமல் 49 பந்தில் 65 ரன்கள் குவித்தார். ஆனாலும் ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி இந்த போட்டியை 29 ரன் வித்தியாசத்தில் வென்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்த வெற்றிக்குப் பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் “எங்களுக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானதாக இருந்தது. இந்த நிலையில் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் துவங்கிய விதம், எங்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. நாங்கள் தொடங்கிய வேகத்திற்கு 200 ரன்கள் எடுக்க முடிந்திருக்கலாம் ஆனால் நிலைமைகள் வேறு மாதிரி இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : அந்தவொரு சின்ன விஷயத்தால தோத்துட்டோம்.. இல்லனா கதையே வேற.. நாங்கதான் லீடிங் – சிக்கந்தர் ராஸா பேட்டி

இந்த விக்கெட்டில் பந்து நன்றாக கிரிப் ஆகியது. மேலும் பந்து இரண்டு விதமான வேகத்தில் வந்தது. இதன் காரணமாக லென்த் பந்துகளை அடிப்பது எங்களுக்கு சிரமமாக இருந்தது. நாங்களும் இதே போல லென்த் பந்துகளை வீசவே திட்டமிட்டோம்.மேலும்ஆடுகளத்தில் ஏதாவது உதவி இருந்தால் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருப்பார்கள் என்று தெரியும். இன்றைய போட்டியில் எங்களுடைய தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் பந்துவீச்சாளர்கள் வரை சிறப்பாக இருந்தார்கள்” என்று கூறி இருக்கிறார்.