இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்ட நிலையில் மதியநேர உணவு இடைவெளிக்கு முன்பு கருண் நாயர் விக்கெட்டை இழந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்கியுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை இந்திய அணி ஒருமுறை கூட வெற்றி பெற்றது கிடையாது. இந்த நிலையில் தொடக்க வீரராக விளையாடிய ராகுல் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை வெறுப்பேற்றினார்.
இந்திய அணி ரன் குவிப்பு:
இந்த சூழலில் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால், கருண் நாயர் ஆகியோர் அபாரமாக விளையாடி வந்ததை சேர்த்தனர். கருண் நாயர் கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் பவுலர்களை விரட்டி இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். மறுபக்கம் ஜெய்ஸ்வால் தனது பழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கிட்டத்தட்ட ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட் போல் விளையாடி 11 பவுண்டரிகளை விரட்டினார். ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் அரை சதம் கடந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் மதிய உணவு நேர இடைவேளை நெருங்கிய போது 31 ரன்களில் ஆட்டம் இழந்தார். 25 ஓவர் முடிவில் தற்போது இந்திய அணி 98 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற ஸ்கோர் உடன் மதிய உணவுக்கு சென்றுள்ளது.
ரோகித் ரெக்கார்ட் முறியடிப்பு:
ஜெய்ஸ்வால் ஆட்டம் இழக்காமல் 62 ரன்கள் எடுத்திருக்கின்றார். இதன் மூலம் ஜெய்ஸ்வால், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அதிக அரை சதம் அடித்த தொடக்க வீரர் பட்டியலில் ரோகித் சர்மாவை முந்தியிருக்கின்றார். ரோகித் சர்மா இதுவரை நான்கு அரை சதம் அடித்திருந்த நிலையில் தற்போது ஜெய்ஸ்வால் ஐந்து அரை சதம் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: தப்பான அணியை தேர்வு செய்த இந்தியா.. பிர்மிங்காமில் வேலையை காட்டிய ராகுல்..மோசமான ரெக்கார்ட்
இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்த தொடக்க வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். கவாஸ்கர் 20 அரைசதம் மேல் அடித்துள்ள நிலையில் ரோகித் சர்மா 8 முறை 50 ரன்கள் மேலேயும் ஜெய்ஸ்வால் ஏழு முறை 50 ரன்களுக்கு மேலேயும் அடித்திருக்கின்றார்.






