சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெற்றி பெற்ற விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
இந்திய அணி அபார வெற்றி
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித், பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்க, ஓரளவு சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணிக்கு அதற்கு மேல் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் போனதால் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 264 ரன்கள் குவித்தது.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்க, கேப்டன் ரோஹித் சர்மா 28 ரன்கள் எடுத்து எதிர் பாரத விதமாக ஆட்டம் இழந்து வெளியேற, வழக்கம் போல விராட் கோலி இந்திய அணியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு பக்கபலமாக ஸ்ரேயாஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஐயர் 45 ரன்கள் எடுக்க, விராத் கோலி இறுதியில் 84 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதிக்கட்டத்தில் கேஎல் ராகுல் 42 ரன்கள் குவிக்க இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நாங்கள் விவாதித்தது இதை தான்
இந்த போட்டி குறித்து அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசும் போது “கடைசி பந்து வீசப்படும் வரை ஆட்டத்தின் முடிவு என்ன என்பது உறுதியாக தெரியவில்லை. ஆட்டத்தின் பாதியில் இது ஒரு நியாயமான ஸ்கோர் என்பதை நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தோம். மேலும் பேட்டிங்கில் அவசரப்படாமல் நிதானப்போக்கை கடைபிடிக்க வேண்டும். நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்பினோம், பிட்ச் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து அதிகமாக தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
இதையும் படிங்க:அவசரப்பட்டா எல்லாம் போச்சு.. நான் களத்தில் இந்த விஷயத்தை மட்டுமே நினைத்தேன் – வெற்றிக்குப் பின் விராட் கோலி
குறிப்பாக 6 பந்துவீச்சு விருப்பங்கள் இருக்க வேண்டும் நம்பர் 8 வரை பேட்டிங்கும் இருக்க வேண்டும் என்பதுதான் நான் ஆரம்பத்திலேயே விவாதித்த ஒரு விஷயமாகும். எனவே இந்த அணியை உருவாக்கிய சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். உங்களுக்கு பந்து வீச ஆறு பேர் இருக்கும்போது யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். விராட் கோலி பல வருடங்களாக எங்களுக்கு இதை செய்து வருகிறார். விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்ட விதம் நாங்கள் விரும்பினோம். இறுதியில் ஹர்திக் பாண்டியா அடித்த பெரிய ஷாட்கள் முக்கியமாக இருந்தது. இறுதிப் போட்டி வரும்போது அனைவரும் பார்மில் இருக்க வேண்டும். அதில் மிகவும் மகிழ்ச்சி. எனவே அடுத்த போட்டி குறித்து அதிகம் யோசிக்க வேண்டியதில்லை வீரர்கள் இப்போதைக்கு ஓய்வு எடுக்க வேண்டும் அதுவே முக்கியம்” என்று பேசி இருக்கிறார்.






