அவசரப்பட்டா எல்லாம் போச்சு.. நான் களத்தில் இந்த விஷயத்தை மட்டுமே நினைத்தேன் – வெற்றிக்குப் பின் விராட் கோலி

0
2092

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்த விராட் கோலி போட்டி குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி சிறப்பான வெற்றி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 96 பந்துகளை எதிர் கொண்டு 73 ரன்கள் குவித்தார். இந்தியா அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் முகமது சமி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகள் விரைவாக வெளியேறினாலும், அதற்குப் பிறகு விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி சிறப்பாக விளையாடி இந்திய அணியை கரை சேர்த்தது. இதில் குறிப்பாக விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 98 பந்துகளை எதிர் கொண்டு 84 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 267 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

வெற்றி குறித்து விராட் கோலி

இந்த வெற்றி குறித்து விராட் கோலி கூறும்போது “இது பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய மற்றொரு நாளை போலவே இருந்தது. இது குறிப்பாக ஆடுகளத்தின் நிலைமைகளை பொறுத்தது மற்றும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது பற்றிய விஷயமாகும். இந்த ஆடுகளத்தில் பார்ட்னர்ஷிப் என்பது மிகவும் முக்கியம். பின்னர் நான் எனது இன்னிங்சை விளையாடினேன். நான் முக்கியமாக உணர்ந்தது நீண்ட நேரம் அமைதி காத்து களத்தில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே. எதற்கும் அவசரப்படக்கூடாது என்று முடிவு செய்தேன்.

இதையும் படிங்க:WC பைனல் தோல்விக்கு பதிலடி.. சேஸ் மாஸ்டர் கோலி அபாரம்.. ஆஸி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி

நான் எடுத்த ஒற்றை இலக்கங்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டி முழுக்க முழுக்க அழுத்தம் பற்றியது. நீங்கள் விளையாட்டில் ஆழமாக சென்றால் எதிரணி உங்களுக்கு அடிபணிந்து விடும். நான் விளையாடியதில் சிறந்த இன்னிங்ஸ் இதுவா? என்று கேட்டால் எனக்கு தெரியாது. அது உங்கள் விருப்பம், அந்த விஷயங்களில் நான் ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை. நீங்கள் அந்த சாதனைகளைப் பற்றி நினைக்காத போது இது போன்ற விஷயங்கள் நடக்கும். நான் மூன்று இலக்க மதிப்பெண்கள் எட்டினால் அது சிறப்பானது தான் ஆனால் எனக்கு இனி அணியின் வெற்றி தான் முக்கியம். அது குறித்து சிந்திக்கப் போவதில்லை” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -