இப்பதான் நிம்மதியா இருக்கு.. நான் எதிர்பார்த்ததை அவர் கொடுத்திருக்காரு.. எனக்கு நம்பிக்கை வந்துருச்சு – ரோகித் சர்மா பேட்டி

0
7176
Rohit

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்திய அணி அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த போட்டியின் வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா வெற்றிக்கான காரணங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக இருக்கும் நியூயார்க் மைதானத்தில் இன்றைய போட்டி நடைபெற்றது. டாசில் தோற்ற அமெரிக்க அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தது. அர்ஸ்தீப் சிங் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் சீக்கிரத்தில் வெளியேறி விட்டார்கள். சூரியகுமார் யாதவ் 49 பந்தில் 50* ரன், சிவம் டுபே 35 பந்தில் 31* ரன் எடுக்க இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி, அடுத்த சுற்று முன்னேறியது.

இன்றைய போட்டியில் வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா “எங்களுக்கு இந்த இலக்கு கடினமாக இருக்கும் என்று தெரியும். நாங்கள் சிறப்பான முறையில் சென்று பார்ட்னர்ஷிப் அமைத்ததற்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. முதிர்ச்சியைக் காட்டி வெற்றிக்கு அழைத்துச் சென்ற சூரியகுமார் மற்றும் சிவம் துபேவுக்கு பாராட்டுகள். அமெரிக்க அணிக்கு விளையாடும் வீரர்களின் பலர் எங்களுடன் விளையாடி இருக்கிறார்கள். இவர்கள் கடினமாக உழைக்கக்கூடியவர்கள். அவர்களின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அடைகிறேன்.

- Advertisement -

இங்கு ரன் குவிப்பது கடினம்.எனவே பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். குறிப்பாக அர்ஸ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசினார். இன்று ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது எனவே சிவம் துபே பந்து வீச பயன்படுத்தப்பட்டார். இப்படியான விருப்பங்கள் தேவையாக இருக்கிறது.

இதையும் படிங்க: 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி.. அமெரிக்கா தோல்விக்கு காரணம் என்ன?

அடுத்து சுற்றுக்கு தகுதி பெறுவது பெரிய நிம்மதி. இங்கு கிரிக்கெட் விளையாடுவது எளிதானது கிடையாது. நாங்கள் வெற்றி பெற்ற மூன்று போட்டிகளிலும் அடிப்படை விஷயங்களை கடைசி வரை பின்பற்றினோம். இந்த வெற்றியின் மூலம் மிகுந்த நம்பிக்கையை பெறுவேன். சூரியகுமார் தன்னிடம் வித்தியாசமான இந்த மாதிரி ஆட்டம் இருப்பதாகவும் காட்டி இருக்கிறார். அனுபவம் வாய்ந்த வீரர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது இதைத்தான். ஆட்டத்தை ஆழமாக எடுத்து அணியை வெற்றி பெற வைத்ததற்கு சூரிய குமாருக்கு பெருமைகள் சேரும்” என்று கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -