இந்திய கிரிக்கெட்

தேவைப்பட்டா இவங்களை மாத்தவும் தயங்க மாட்டோம்.. முக்கியமா அந்த தைரியம் இருக்கணும் – ரோகித் சர்மா விளக்கம்

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று முடிவுக்கு வந்தது. இந்த தொடரை இலங்கை அணி இந்திய அணியை வீழ்த்தி 2-0 என 27 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்திய அணி இந்தத் தொடரின் மூன்று போட்டிகளிலும் டாஸ் இழந்து இரண்டாவது பேட்டிங் செய்தது பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சை புதிதாக விளையாட கூடியவர்கள் போல மிக மோசமாக விளையாடினார்கள். இந்திய அணி பேட்ஸ்மேன்களிடம் சுழல் பந்துவீச்சுக்கு எதிரான பொதுவான திட்டமும் காணப்படவில்லை, தனிப்பட்ட திட்டங்கள் எதையும் பார்க்க முடியவில்லை.

இந்த தோல்வி இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தை மனதளவில் கடுமையாக பாதித்திருக்கிறது. நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையாகவே இந்திய அணி வீரர்கள் தைரியமாக விளையாடி இருக்க வேண்டும் என்று கூறினார். தற்பொழுது தேவைப்பட்டால் இதற்காக பணியாளர்களையும் மாற்றுவோம் என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

இது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது ” இத்தனை விக்கட்டுகளில் நீங்கள் எப்பொழுதும் பேட்டிங்கில் லெஃப்ட் ரைட் காம்பினேஷன் வைத்திருக்க பார்க்க வேண்டும். நாள் இப்படியான ஆடுகளத்தில் பந்து சுழலும் மேலும் ஸ்கோர் எடுப்பது மிகவும் கடினமாக இருக்கும். நீங்கள் ஆட்டத்தை எடுப்பவராக இருக்க வேண்டும். நாங்கள் இன்னும் துணிச்சலாக இருந்திருக்க வேண்டும். அவர்களை அழுத்தத்தில் வைக்கும் அளவுக்கு நாங்கள் விளையாடவில்லை.

- Advertisement -

ஆனால் கிரிக்கெட்டில் இப்படியான விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். அதனால் இதை நான் அதிகம் பார்க்க விரும்பவில்லை. நாங்கள் இந்த கவலைகள் எல்லாவற்றையும் சரி செய்வோம். எங்களுக்கு கடந்த காலங்களிலும் இப்படியான பிரச்சினைகள் இருந்திருக்கிறது. இது வீரர்களின் தனிப்பட்ட திட்டங்கள் பற்றியது. அவர்கள் வந்து வீச்சாளர்களை எங்கே எடுக்க விரும்புகிறார்கள் எப்படி விளையாட நினைக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் இதைப் பற்றி பேச விரும்புகிறோம். மேலும் நாங்கள் வீரர்களிடம் விரும்பக்கூடியது என்னவென்று தெளிவுபடுத்த நினைக்கிறோம்.

இதையும் படிங்க : அடுத்த 41 நாள்.. 0 போட்டி.. இனி 2024ல் இந்திய அணியின் அட்டவணை.. டிசம்பரில் அசத்தல் தொடர்

அணிக்கான பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் நாங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றால், துரதிஷ்டவசமாக நாங்கள் பணியாளர்களை மாற்றுவதற்கான கடினமான முடிவுகளையும் எடுக்க வேண்டி இருக்கும். நாங்கள் எல்லா வகையான ஆடுகளங்களிலும் சிறப்பான ஒரு அணியாக இருப்பதற்கான முயற்சிகளை செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Rohit sharma

Recent Posts