ஆஸி சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு விஷயத்தை பார்த்தோம்.. நாட்டுக்காக இத தாங்க போறோம் – ரோகித் சர்மா பேச்சு

0
76
Rohit

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தங்களது முதல் சுற்றில் மூன்று போட்டிகளை நியூயார்க் நாசாவ் மைதானத்தில் விளையாடுகிறது. மேலும் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் மோத இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மிக முக்கியமான அறிவுரையை இந்திய அணிக்கு வழங்கியிருக்கிறார்.

தற்போது இந்திய அணி விளையாடி வரும் நியூயார்க் மைதானத்தின் ஆடுகளத்தில் கணிக்க முடியாத பவுன்ஸ் இருக்கிறது. சில நேரம் தாழ்வாக செல்லும் பந்து, சில நேரம் மிகவும் உயரமாக வந்து உடலின் பல பகுதிகளையும் தாக்குகிறது. இதனால் இந்த ஆடுகளம் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா “தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் விளையாடும் பொழுது இப்படியான நிறைய ஆடுகளங்களைப் பார்த்திருக்கிறோம். நீங்கள் இப்படியான தடைகளை கடந்து வர வேண்டும். நாங்கள் ஆஸ்திரேலியாவில் காபா டெஸ்ட் போட்டியை வென்றது எங்களின் மன உறுதியால்தான்.

நாங்கள் காபா டெஸ்டில் விளையாடிய பொழுது ஆடுகளத்தில் பவுன்ஸ் நிறைய இருந்ததை தொடர்ந்து பார்த்தோம். மேலும் பல பேட்டர்களின் மார்பு மற்றும் கை விரல்களில் அடிபட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் இதை கடந்து வந்தாக வேண்டும். நீங்கள் ஒரு தனி நபராக உங்களை சோதித்துக் கொள்ள சரியானது.

எனவே விளையாடப் போகும் அனைத்து வீரர்களும் கடினமான சூழ்நிலையில் தங்களை வைத்துக் கொள்வதற்கு விரும்புகிறார்கள். கடினமான சூழ்நிலையில் இருந்து முன்னேற விரும்புகிறார்கள். இது உலகக்கோப்பை எனவே இதைவிட பெரிய விஷயம் எதுவும் இருக்க முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : பாபர் கிடையாது.. இந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்தான் இந்தியாவுக்கு பிரச்சனை – ஹர்பஜன் சிங் அறிவுரை

உலகக் கோப்பையில் நீங்கள் விளையாடும் பொழுது, அதைவிட பெரிய விஷயமாக உங்கள் உடலில் அடிபடுவது இருக்க முடியாது. இதெல்லாம் வெளியில் இருக்கட்டும். நாம் எதிர்த்துப் போராடி அணிக்காக வேலையைச் செய்து வெற்றி பெற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.