“கொஞ்சமாவது மூளையை பயன்படுத்து”.. இன்சமாம் வைத்த குற்றச்சாட்டுக்கு ரோகித் சர்மா பதிலடி

0
1188
Rohit

இந்திய அணி நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவருடைய பாணியில் இதற்கு பதில் அளித்து இருக்கிறார்.

இன்சமாம் உல் ஹக் குற்றச்சாட்டு வைத்த அந்த போட்டியில் அர்ஸ்தீப் சிங் பேசிய 15ஆவது ஓவரில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. பொதுவாக இந்த ஸ்விங் பந்து பழையதனால் மட்டுமே நடக்கக்கூடிய ஒன்று. பொதுவாக 25 முதல் 30 ஓவர்களை ஒரு பந்து தாண்டும் பொழுது இப்படி நடக்கும். மேலும் அந்த ஸ்பெல்லில் அர்ஸ்தீப் சிங் ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூடிய பொழுது பந்து இந்த வகையில் இவ்வளவு சீக்கிரத்தில் ஸ்விங் ஆக வாய்ப்பு இல்லை என்றும், பந்தை சேதப்படுத்தி இருந்தால் மட்டுமே இப்படி சீக்கிரத்தில் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் எனவும், இந்திய அணியினர் பந்தை ஏதோ செய்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.

மேலும் சில அணிகள் என்று வரும்போது இப்படியான விஷயங்களில் பல நடுவர்கள் தலையிட மாட்டார்கள் என்றும், இதுவே பாகிஸ்தான் அணிக்கு இப்படி நடந்திருந்தால் உடனே அவர்கள் இது குறித்து பேசி இருப்பார்கள் எனவும், வெளியில் இருந்தும் நிறைய சத்தங்கள் வந்திருக்கும் எனவும் கடுமையாக குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியை முன் வைத்தார்கள். இதற்கு ரோஹித் சர்மா தன்னுடைய பாணியில் மிகக் கடுமையான பதில் ஒன்றைத் தந்திருக்கிறார்.

இதையும் படிங்க : ராபின்சனின் ஒரே ஓவரில் 43 ரன்கள்.. 143 வருட கவுண்டி கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை.. இங்கிலாந்து வீரர் அதிரடி

இதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா “இதற்கு நான் என்ன பதில் சொல்வேன்?நீங்கள் வெயிலில் விளையாடினால், ட்ரை ஆன ஆடுகளத்தில் விளையாடினால், பந்து சீக்கிரத்தில் தேயும். இதனால் பந்து சீக்கிரத்தில் ரிவர்ஸ் ஸ்விங்கு ஆகும். இது எங்களுக்கு மட்டுமல்ல எல்லா அணிகளுக்கும் நடக்கும். சில சமயங்களில் மூளையைப் பயன்படுத்துவது நல்லது. நாங்கள் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் விளையாடவில்லை. நல்ல வெயில் அடிக்கும் வெஸ்ட் இண்டீஸ் விளையாடுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -