ஜெய்ஸ்வால் இந்தியாவுக்கு ஆடற காரணம் இதுதான்.. பிளேயிங் XI இப்படிதான் இருக்கும் – ரோகித் சர்மா பேட்டி

0
233
Rohit

இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் எல்லா சூழ்நிலைகளிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையை பெற்றிருக்கக் கூடிய வீரர் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா பாராட்டி இருக்கிறார்.

நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா தொடர் குறித்து கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மாவின் புதிய பேட்டிங் பார்ட்னர்

ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக ஷிகர் தவான் உடன் இணைந்து கேஎல்.ராகுல் விராட் கோலி, கில் என கடந்து தற்பொழுது ஜெய்ஸ்வாலுடன் இணைந்து இருக்கிறார். ரோகித் சர்மாவின் அதிரடியான அணுகுமுறைக்கு ஜெய்ஸ்வால் மிகச் சரியான பேட்ஸ்மேன் ஆகவும் பொருந்தி இருக்கிறார்.

இருவரும் சூழ்நிலைக்கு தகுந்தபடி சரியான முடிவுகளை எடுத்து பேட்டிங் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆடுகளம் கடினமாக இருந்தால் அதற்கேற்றபடியும், ஷாட் விளையாட வசதியாக இருந்தால் அதற்கேற்றபடியும் விளையாடுகிறார்கள். ஜெய்ப்பால் முதலில் ஆட்டம் இழந்தால் ரோகித் சர்மா அங்கிருந்து தனது ஆட்டத்தை மாற்றி பொறுமையாக கொண்டு செல்கிறார். இப்படி இருவருக்குள்ளும் சிறப்பான அட்ஜஸ்ட்மென்ட் அமைந்திருக்கிறது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் இதனால் இந்திய அணியில் விளையாடுகிறார்

இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசும் பொழுது “ஜெய்ஸ்வால் உண்மையான திறமையானவர். அவர் எல்லா சூழ்நிலையிலும் விளையாடக்கூடிய திறமையை பெற்றிருக்கிறார். அவர் புதியவராக இருப்பதால் முன்கூட்டிய மதிப்பிடுவது கடினம் என்றாலும் கூட, அவரிடம் சிறந்த பேட்ஸ்மேனுக்கான எல்லாமே இருக்கிறது. இதனால்தான் தரவரிசையில் மேலே இருக்கிறார். இதன் காரணமாகத்தான் இந்தியாவுக்கு விளையாடுகிறார்”

இதையும் படிங்க : இன்னும் 3 டெஸ்ட்.. விராட் கோலியின் மெகா சாதனையை உடைக்கும் ரோஹித் சர்மா.. நியூசி தொடரில் நடக்குமா?

“இந்த போட்டியில் நாட்கள் எப்படி செல்கிறது என்பதை பார்த்து எங்கள் அணுகுமுறையை அமைப்போம். கான்பூர் டெஸ்டில் இரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டது நாங்கள் அதிரடியாக விளையாட முடிவு செய்தோம். தற்பொழுது பெங்களூரில் மழை பெய்து கொண்டே இருக்கிறது. எனவே போட்டியில் நாட்கள் செல்வதை பொறுத்து முடிவுகள் மாறும். எப்படியும் நாங்கள் போட்டியை வெல்லும் வகையில் முடிவுகள் எடுத்து விளையாடுவோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -