நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலியின் மெகா சாதனை ஒன்றை உடைப்பதற்கான வாய்ப்பில் அருகில் இருக்கிறார்.
இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் துவங்குகிறது.
தோனி காலத்தில் இல்லாதது
மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த பொழுது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தவில்லை. இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்று இருந்த காலத்திலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டது.
விராட் கோலி கேப்டனாக முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை அழைத்துச் சென்றார். அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் பாதியில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். இதைத்தொடர்ந்து ரோகித் சர்மா இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை கேப்டனாக அழைத்துச் சென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா உடைக்க இருக்கும் விராட் கோலி சாதனை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் விராட் கோலி மொத்தம் 22 போட்டிகளுக்கு கேப்டனாக தலைமை தாங்கி அதில் 14 வெற்றி மற்றும் ஏழு தோல்வி ஒரு டிரா என கண்டிருக்கிறார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் விராட் கோலியின் கேப்டன் வெற்றி சதவீதம் 63.63 என சிறப்பாகவே இருக்கிறது.
அதே சமயத்தில் ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் 18 டெஸ்ட் போட்டிகளில் 12 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகள் மற்றும் இரண்டு போட்டிகள் டிராவில் முடிவடைந்து இருக்கின்றன. இவருடைய வெற்றி சதவீதம் 66.66 என விராட் கோலியை விட அதிகமாக இருக்கிறது.
இதையும் படிங்க : யோசிச்சு பார்த்தா இந்திய அணியை நான் தோற்கடிக்கவே இல்ல.. இதுதான் முடிவு செஞ்சிருக்கேன் – பேட் கம்மின்ஸ் பேட்டி
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா கேப்டனாக முழுமையாக கைப்பற்றினால்,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் கேப்டனாக அதிக வெற்றிகள் பெற்றிருக்கும் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.






