2-1னு இருந்திருக்கணும்.. எல்லாம் போச்சு.. அடுத்த டெஸ்டுக்காக வெயிட் பண்ண முடியல – பேட் கம்மின்ஸ் பேச்சு

0
3053

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்தது தமக்கு மிகவும் ஏமாற்றமாக இருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபாவில் நடைபெற்று இன்று டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் எடுத்திருந்த போதும் டிராவில் முடிவடைவது அந்த அணிக்கு பெரிய ஏமாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

காப்பாற்றிய நான்கு வீரர்கள்

இந்த டெஸ்ட் போட்டியில் மழை இருந்தாலுமே இந்திய முன்னணி பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததால் இந்திய அணி தோல்வி அடைவதற்கான வாய்ப்புகளும் இருந்தது. இந்த நிலையில் கேஎல்.ராகுல் ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பான அரை சதங்கள் அடித்தார்கள்.

இந்திய அணிக்கு இரண்டு அரை சதங்கள் கிடைத்த பொழுதும் பாலோ ஆன் ஆவதற்கான வாய்ப்பு, அதனால் தோல்வியடைவதற்கான வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா இருவரும் கடைசி கட்டத்தில் பாலோ ஆன் ஆபத்திலிருந்து இந்திய அணியை மீட்டார்கள். இந்த நான்கு வீரர்களின் செயல்பாடு இந்திய அணியை இந்த டெஸ்ட் தோல்வியில் இருந்து காப்பாற்றி இருக்கிறது.

- Advertisement -

2-1 என இருந்திருக்க வேண்டும்

இந்த டெஸ்ட் போட்டி குறித்து பேசி இருக்கும் பேட் கம்மின்ஸ் கூறும்பொழுது “2-1 என இருந்திருந்தால் மிகவும் சிறப்பானதாக இருந்திருக்கும். ஆனால் நம்மால் மழையை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் பெரிய ரன்கள் குவித்தோம். போட்டியில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக உணர்ந்தோம்.ஆனால் ஹேசில்வுட் காயம் மோசமானதாக அமைந்தது. இருந்தாலும் மழையின் இடைவெளியை பயன்படுத்தி நானும் ஸ்டார்க்கும் ஓய்வெடுத்து பந்து வீசினோம். மேலும் ஐந்தாவது நாளில் பந்து புதியதாக இருக்கும் பொழுது கடினமாக இருப்பதை உணர்ந்தேன்”

இதையும் படிங்க : போதும் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுகிறேன்.. இவங்களுக்கு நன்றி சொல்லலனா நல்லா இருக்காது – அஸ்வின் உருக்கமான பேச்சு

“ஹெட் மற்றும் ஸ்மித் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார்கள். இவர்களுடன் கீழ் வரிசையில் கேரியும் நன்றாக விளையாடினார். கடைசியில் நாதன் லயன் மிக அழகாக செயல்பட்டார். அடுத்து பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு மெல்போர்ன் மைதானம் ரசிகர்களால் நிரம்பி இருக்கும். ஆஸ்திரேலியாவில் நீங்கள் காத்திருக்க முடியாத விஷயத்தில் இதுவும் ஒன்று” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -