டி20 உலகக் கோப்பை 2024

தெ.ஆ ஓகே.. ஆனா நாங்க சாதாரணம் கிடையாது.. இன்னைக்கு நான் எதிர்பார்க்கிறது இதுதான் – ரோகித் சர்மா பேட்டி

இன்று ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பார்படாஸ் பிரிட்ஜ்டவுன் கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் மோதிக் கொள்கின்றன. உலகக்கோப்பை வரலாற்றில் தென் ஆப்ரிக்கா முதன் முதலில் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. இந்தியா கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை வென்று இருக்கிறது. எனவே இந்த போட்டிக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

- Advertisement -

தற்போது இந்த போட்டிக்கான தாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்து இருக்கிறார். மேலும் இந்திய அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. அரையிறுதியில் விளையாடிய அதே அணி விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்கா அணியிலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

இந்த போட்டி நடைபெறும் ஆடுகளம் ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட நான்காவது ஆடுகளம் ஆகும். மேலும் இந்த ஆடுகளம் நடுவில் அமைந்திருப்பதால் இரண்டு பக்கத்திலும் ஒரே அளவிலான தூரம் இருப்பது நல்ல விஷயம்.

இந்த மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளம் ஆகும். இந்தியா விளையாடும் முதல் பகுதியில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக இருக்கும். இரண்டாவது பகுதியில் விளையாட ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே வேளையில் இந்த மைதானத்தில் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று அடிக்கிறது. எனவே இந்த காற்றை பயன்படுத்தி இரண்டு அணியின் பந்துவீச்சாளர்களும் பந்து வீச முயற்சி செய்வார்கள். எனவே பேட்மேஸ்மேன்கள் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டியது அவசியம்.

இந்த போட்டியில் டாஸ் முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ” இது நல்ல ஆடுகளமாக தெரிகிறது. எனவே நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய போகிறோம். நாங்கள் இங்கு ஏற்கனவே ஒரு போட்டி விளையாடியிருக்கிறோம் ஸ்கோர் நல்லபடியாக வந்தது. இது தனிப்பட்ட வீரர்களின் ரோல் என்னவென்று புரிந்து கொள்வது பற்றியது.

இதையும் படிங்க: பிட்ச் இப்படி இருந்தா தயவுசெய்து இவரை நம்பாதீங்க.. அதுக்கு 2 ஆல்ரவுண்டர்ஸ் இதை பண்ணலாம்- மஞ்ச்ரேக்கர் பேட்டி

ஆனால் ஒரு நல்ல அணிக்கு எதிரான மற்றொரு சர்வதேசப் போட்டி. தென் ஆப்பிரிக்கா நல்ல கிரிக்கெட் விளையாடி இருக்கிறது. அதே சமயத்தில் நாங்களும் அப்படித்தான்.இரண்டு நல்ல அணிகளுக்கு இடையேயான போட்டியாக இருக்கும். எங்கள் அணியில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அதைத்தான் இன்றும் எதிர்பார்க்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by