என் டீம்ல இந்த 2 பேர்தான் எனக்கு பிரச்சனை தருவாங்க.. வரட்டும் பாத்துக்கலாம் – ரோகித் சர்மா பேட்டி

0
1360
Rohit

இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் நாளை 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற பிறகு கேப்டன் ரோஹித் சர்மா பங்குபெறும் முதல் தொடராக இது அமைந்திருக்கிறது. மேலும் விராட் கோலியும் டி20 உலகக் கோப்பைக்கு அடுத்து இந்த தொடருக்கு தான் வருகிறார். எனவே இருவருடைய ரசிகர்களும் இந்த தொடரை மிகவும் ஆவலாக எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

- Advertisement -

அதேவேளையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் கவுதம் கம்பீர் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இளம் வீரர்களுடன் பணியாற்றினார். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தான் அவர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுடன் சேர்ந்து பணியாற்ற இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே நாளை தொடர் தொடங்க இருக்கும் நிலையில் இந்த தொடர் குறித்தான சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கலந்து கொண்டார். அதில் இந்திய பிளேயிங் லெவலை அமைப்பதில் இருக்கும் சிக்கல் மற்றும் புதிய பயிற்சியாளர் கம்பீர் உடன் சேர்ந்து பணியாற்றுவது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது ” டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது தற்பொழுது எப்படி இருக்கிறது என்றால், ஒரு தொடரில் ஓய்வெடுத்த உணர்வை தான் கொடுக்கிறது. நாளை பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கும். இருவருமே அவரவர் வழியில் தனியாக ஆட்டத்தை வெல்லும் மேட்ச் வின்னர்கள். இது ஒரு மகிழ்ச்சியான பிரச்சனை. இப்படியான மகிழ்ச்சியான பிரச்சனைகளை எதிர் கொள்ள நான் விரும்புகிறேன்.

இதையும் படிங்க : தோனி சிறந்த கேப்டன்.. அப்ப ரோகித் யாரு?.. இப்ப இந்திய கேப்டன் இதுல ஆச்சரியப்பட வைக்கிறாரு – ரவி சாஸ்திரி பேட்டி

தற்போதைய பயிற்சியாளர் கம்பீர் நிறைய கிரிக்கெட் விளையாடியவராக இருக்கிறார். இந்திய அணிக்குப் பயிற்சியாளராக வருவதற்கு முன்னால் ஐபிஎல் தொடரில் சில அணிகளுக்கு அவர் பயிற்சியாளராக வேலை செய்திருக்கிறார். நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சில காலம் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். மேலும் புதிய பயிற்சி அமைப்பு எப்பொழுதும் வித்தியாசமான ஒன்றைக் கொண்டு வரும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -