நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகளத்தை தான் தவறாக கணித்து விட்டதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இன்று வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவிய பொழுதும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் கில் இல்லாத காரணத்தினால் கேஎல்.ராகுலை மேலே கொண்டு வராமல் விராட் கோலியை மூன்றாவது இடத்திற்கு அனுப்பியதும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இது குறித்து பேசி இருக்கும் ரோகித் சர்மா கூறும் பொழுது “முதல் செஷனுக்குப் பிறகு ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு உதவாது என்று நாங்கள் நினைத்தோம். மேலும் ஆடுகளத்தில் புல் இல்லை. பேட்டிங் செய்வதற்கு சாதகமாக தட்டையாகவே இருந்தது. இது என்னுடைய தவறான முடிவு. ஆடுகளத்தை சரியாக கணிக்கவில்லை”
“வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு சூழ்நிலையில் நாங்கள் 46 ரன்னில் ஆல் அவுட் ஆகி இருப்பதால் எங்களுடைய ஷாட் தேர்வு தவறாக இருப்பதாக பேசப்படலாம். சில நேரங்களில் நீங்கள் ஏதாவது செயல்படுத்த விரும்பினாலும் கூட முடியாமல் தவறு செய்து விடுவீர்கள். இப்படி எங்களுக்கு இன்று ஒரு மோசமான நாளாக அமைந்துவிட்டது”
மேலும் பேசிய கேப்டன் ரோகித் சர்மா “நாங்கள் கேஎல். ராகுல் பேட்டிங் வரிசையில் ஆறாவதாக புதிதாக களமிறங்குவதை மாற்ற வேண்டாம் என்று நினைத்தோம். அவர் தொடர்ந்து அதே இடத்தில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று விரும்பினோம். ஏறக்குறைய சர்வதேச கிரிக்கெட்டுக்கு புதிதாக வந்திருக்கும் சர்ப்ராஸ் கானுக்கும் அவரது இடத்தையே கொடுக்க நினைத்தோம்”
இதையும் படிங்க: 261 ரன்கள்.. ஒரே நாளில் 16 விக்கெட்டுகள்.. இங்கிலாந்து அணிக்கு எதிராக.. பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பு.. முல்தான் 2வது டெஸ்ட்
“இப்படியான சூழ்நிலையில் விராட் கோலி தான் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி விளையாடுவதாக ஏற்றுக் கொண்டார். நாங்கள் இது குறித்து விவாதித்து முடிவெடுத்தோம். விராட் கோலி நல்ல நிலையில் இருந்தார். எங்கள் அணியில் வீரர்கள் தாமாகவே பொறுப்பெடுத்து கொள்கிறார்கள் என்பதற்கான நல்ல அறிகுறி இது” என்று கூறியிருக்கிறார்.