வெறும் 121 ரன் .. பண்ட் ஹர்திக் அசத்தல்.. பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணியை இந்தியா எளிதில் வென்றது

0
458
ICT

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக விளையாடி 61 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் வந்தார்கள். இதில் சஞ்சு சாம்சன் 6 பந்தில் 1 ரன் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் அனுப்பப்பட்ட ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடினார். 32 பந்தில் 53 ரன்கள் குவித்த அவர், மற்ற வீரர்கள் விளையாடுவதற்கு வழிவிட்டு சென்றார். இதற்கு அடுத்து சூரியகுமார் யாதவ் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் பினிஷர் ரோலில் வந்த ஹர்திக் பாண்டியா சிறப்பான முறையில் விளையாடும் நான்கு மெகா சிக்ஸர்கள் அடித்து 23 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சிவம் துபே 16 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. அந்த அணி ஆரம்பத்தில் 41 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அனுபவ வீரர் மகமதுல்லா உடன் சாகிப் அல் ஹாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சாகிப் அல் ஹாசன் 34 பந்தில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையும் படிங்க : டி20 உ.கோ-ல் ஓபனர்ஸ் யார்?.. சூசகமாக சொன்ன ரோகித்.. வேற லெவல் மாஸ்டர் பிளான்

இறுதியாக கடைசிவரை களத்தில் நின்ற மகமதுல்லா 28 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் அர்ஸ்தீப் சிங் மற்றும் சிவம் துபே தலா இரண்டு விக்கெட், சிராஜ், பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் தலா ஒரு விக்கெட் கைபற்றினார்கள்.

- Advertisement -