4 வருஷமா நாங்க முயற்சி செஞ்சதே வேற ஒரு விஷயத்துக்கு.. அது இப்ப கிடைச்சிருச்சு – ரோகித் சர்மா பேட்டி

0
104
Rohit

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இப்படியான ஒரு வெற்றிக்கு எவ்வாறு இந்திய அணியை உருவாக்கினார்கள் என்பது குறித்து பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார்.

நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன் டிராபி தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. மேலும் கடந்த மூன்று ஐசிசி வெள்ளைப் பந்து தொடர்களில் இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்திருக்கிறது. டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் என இரண்டிலும் தோல்வி அடையாமல் வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

நாங்கள் இதையே உருவாக்க நினைத்தோம்

இந்த மிகப்பெரிய வெற்றிகளுக்குப் பின்னால் எப்படியான முயற்சிகள் இருந்தது என்றும், தற்போது இந்திய அணி எந்த முறையில் தயாராகி இருக்கிறது என்றும், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மனம் திறந்து பேசியிருக்கிறார். மேலும் இளம் வீரர்களுக்கான எதிர்காலம் குறித்தும் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

இது குறித்து ரோகித் சர்மா பேசும்பொழுது ” இதுதான் மிகவும் முக்கியமான புள்ளி. நீங்கள் விளையாடும் காலகட்டங்களில் உங்களுடைய பென்ச் வலிமையை உருவாக்க விரும்புகிறீர்கள். கடந்த நான்கு ஐந்து வருடங்களில் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இளம் வீரர்களை விளையாட வைத்து, அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பதை நாங்கள் எப்பொழுதும் உறுதி செய்து வந்திருக்கிறோம்”

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் சிறப்பு இதுதான்

” எந்த வீரரை தேர்வு செய்வது, யாரை வெளியில் வைப்பது என்பது குறித்து தற்போது இந்திய அணியை தேர்வு செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் பேச்சுகள் சென்று கொண்டிருக்கிறது. இப்படியான பேச்சுகள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், இந்திய அணியில் எவ்வளவு திறமையான வீரர்கள் மற்றும் அணியின் ஆழம் இருக்கிறது என்பதுதான். அந்த அளவுக்கு பென்ச் வலிமை மிகவும் அதிகமாக இருக்கிறது”

இதையும் படிங்க : இனி குல்தீப் ரோகித் விராட் கிட்ட திட்டு வாங்க கூடாதுனா.. இத செஞ்சே ஆகணும் – அஸ்வின் பேட்டி

“எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் மிகவும் பாதுகாப்பான கைகளில் இருக்கிறது என்று நான் உறுதியாக கூற முடியும். வீரர்கள் எப்படி வருகிறார்கள், அவர்கள் எப்படி பொறுப்பை எடுக்கிறார்கள், அவர்கள் எவ்வளவு பசியுடன் இருக்கிறார்கள் என்பது மிகச் சிறப்பாக இருக்கிறது. தற்போது இந்திய இளம் வீரர்களுக்கு ஆர்வம் திறமை எல்லாமே இருக்கிறது. அவர்கள் அதை சென்று வெளிப்படுத்த வேண்டும் அவ்வளவுதான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -