இந்திய கிரிக்கெட்

ஷமியை நாங்க கூப்பிட மாட்டோம்.. பும்ரா கேப்டனா மட்டுமே இல்லை.. ஆனா எல்லாமா இருக்கார் – கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் முகமது ஷமி எப்போது வருவார்? என்று மிகவும் வெளிப்படையான முறையில் கூறி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

- Advertisement -

நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் விளையாட இருக்கும் நிலையில், இன்று கேப்டன் ரோஹித் சர்மா சம்பிரதாய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சில முக்கிய விஷயங்கள் குறித்து கூறியிருக்கிறார்.

ரோகித் சர்மாவுக்கு தூண்களான ஷமியும் பும்ராவும்

தற்போது ஷமி முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வில் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் பந்து வீசி பயிற்சி பெற்ற வீடியோக்கள் வெளிவந்தது. இருந்தபோதிலும் கூட ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக அவர் பங்கேற்கவில்லை. எனவே அவருடைய நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து குழப்பமாக இருந்து வருகிறது.

மேலும் பும்ரா முழு உடல் தகுதியோடு எல்லா போட்டிகளிலும் பங்கேற்கும்படி இருப்பது இந்திய கிரிக்கெட் வட்டாரத்திற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. இத்தோடு இந்திய வேகப்பந்து வீச்சு தாக்குதலில் ஆகாஷ் தீப் சேர்ந்து சிறப்பாக செயல்பட ஆரம்பித்து இருப்பதும் இந்திய அணி நிர்வாகத்திற்கு நல்ல அறிகுறியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

ஷமியை கூப்பிட மாட்டோம்

இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசும் பொழுது “ஆஸ்திரேலியா தொடருக்கு முகமது ஷமியை அழைப்பது மிகவும் கடினம். அவருக்கு முழங்காலில் சிறிது வீக்கம் இருந்தது. எனவே அவரை கொஞ்சம் நிறுத்தி மீண்டும் தொடர வேண்டியதாக இருந்தது. அவர் தற்போது என்சிஏவில் இருக்கிறார். முழுதாக குணமடையாத அவரை நாங்கள் கூப்பிடவோ ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு அழைத்து வரவோ விரும்பவில்லை”

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் இந்தியாவுக்கு ஆடற காரணம் இதுதான்.. பிளேயிங் XI இப்படிதான் இருக்கும் – ரோகித் சர்மா பேட்டி

“அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களில் பும்ராவும் ஒருவர். அவர் கேப்டனாக அதிகம் செயல்பட்டது கிடையாது. ஆனால் நான் பந்துவீச்சு குழு உடன் பேசும் போதிலிருந்து மற்ற எல்லாவற்றிலும் ஆலோசனை செய்யும் போதும் அவர் எப்பொழுதும் என்னை சுற்றியே இருப்பார். அவர் அணிக்கு மிகத் தேவையான வீரர்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts