ரோகித் இத நீங்க நோட் பண்ணல.. ரிஷப் பண்ட் உங்களுக்காக பெரிய வேலை பார்த்து இருக்கான் – ரவி சாஸ்திரி கருத்து

0
236
Rohit

இந்திய அணி 17 வருடங்கள் கழித்து டி20 உலகக்கோப்பை தொடரை சனிக்கிழமை தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்றது. இந்தத் தொடர் முழுக்க எல்லா வீரர்களுமே வெற்றிக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இப்படி இறுதிப் போட்டியில் ரிஷப் பண்ட் செய்த ஒரு விஷயம் வெற்றிக்கு மிகவும் முக்கியமாக இருந்ததாக ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தனிப்பட்ட செயல்பாட்டை எடுத்துக் கொண்டால் மேஜிக் போல பல சம்பவங்கள் பல போட்டிகளில் நடந்திருக்கிறது. உதாரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மிட்சல் மார்ஸ் கேச்சை அக்சர் படேல் பிடித்தது நல்ல உதாரணம்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு போட்டியுமே ஒவ்வொரு விஷயங்கள் இந்திய அணிக்கு போட்டியை மொத்தமாக மாற்றின. தொடரில் ஒரு போட்டியில் விளையாடாத வீரர்கள் இன்னொரு போட்டியில் நன்றாக விளையாடினார்கள். தொடர் முழுக்க மோசமாக இருந்த விராட் கோலி இறுதி போட்டிகள் சிறப்பாக விளையாடினார். இதேபோல் ரவீந்திர ஜடேஜா அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முக்கிய ரன்கள் எடுத்தார்.

இந்த வகையில் இந்த தொடரில் பெரிய அளவில் விளையாடாத ரிஷப் பண்ட் சமயோசிதமாக இறுதி போட்டியில் செய்த ஒரு காரியம் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து வந்திருக்கிறது. ஐந்து ஓவர்களுக்கு வெறும் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா இருந்தது. அப்பொழுது 16ஆவது ஓவரை வீசி நான்கு ரன்கள் மட்டுமே பும்ரா கொடுத்தார்.

இந்த நிலையில் அடுத்து ஹர்திக் பாண்டியா 17ஆவது ஓவருக்கு வருவதற்கு முன்பாக, நன்றாக இருந்த ரிஷப் பண்ட் தென் ஆப்பிரிக்க அணியின் வேகத்தை தடுப்பதற்காக காயம் என்று பிசியோவை உள்ளே அழைத்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் ஆட்ட வேகம் பாதிக்கப்பட்டது. இதனால் வீரர்கள் வெளியே சென்று கவனத்தை இழக்கிறார்கள். இப்படி ரிஷப் பண்ட் செய்தது ஹர்திக் பாண்டியா வீசிய 17ஆவது ஓவரின் முதல் பந்தில் அபாயகரமான பேட்ஸ்மேன் ஹென்றி கிளாசனை வெளியே அனுப்பியது. மீதி நடந்ததெல்லாம் வரலாறு.

- Advertisement -

இதையும் படிங்க : வாசிம் அக்ரம் கிடையாது.. பும்ராதான் உலகத்துல அதுக்கு பெஸ்ட்.. நான் ஒத்துக்குறேன் – மைக்கேல் வாகன் கணிப்பு

இதுகுறித்து கிரிக்கெட் நேரடி வர்ணையிலேயே பேசி இருக்கும் ரவி சாஸ்திரி ” இந்தியா தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறது. தற்பொழுது ரிஷப் பண்ட் காயம் என பிசியோவை அழைத்திருப்பது தென் ஆப்பிரிக்க அணியின் ஆட்ட வேகத்தை பாதிக்கும். இந்தியா போட்டியை மெதுவாக்குகிறது. இதன் மூலமாக கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரின் ரிதத்தை உடைக்க முடியும்” என்று கூறினார். இதற்கு அடுத்து அப்படியே நடந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை கேப்டன் ரோஹித் சர்மா உணரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது!