இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாதது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டைலர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இன்று சிட்னி மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. மேலும் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்ற அவர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பும்ரா சொன்ன விளக்கம்
இன்று டாஸ் வென்ற பும்ரா இந்திய பிளேயிங் லெவன் பற்றி பேசிய பொழுது கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு எடுத்துக் கொள்கிறார் என்றும், இந்திய அணியின் ஒற்றுமையை இது காட்டுகிறது என்றும், அணியின் நலனுக்காக யாரும் எதையும் செய்வோம் என்றும் பேசி இருந்தார்.
இந்திய கேப்டன் பும்ரா ரோஹித் சர்மாவை டிராப் செய்யவில்லை மாறாக அவர் ஓய்வு எடுக்கிறார் என்று கூறியிருந்தார். ஆனால் ரோஹித் சர்மா சரியாக விளையாடவில்லை என்ற காரணத்திற்காக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மையாக இருக்கிறது. ஆனால் தற்போது தற்காலிக கேப்டன் பும்ரா மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இருவரும் இந்த விஷயத்தில் வெளிப்படையாக பேச தயங்கி வருகிறார்கள்.
எந்த கேப்டனும் செய்ய மாட்டார்கள்
இது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மார்க் டைலர் கூறும்பொழுது “உண்மையை சொல்வது என்றால் ரோகித் விஷயத்தை நான் எப்படி சொல்வது. ஒரு நாட்டு அணியின் கேப்டன் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒரு போட்டியிலிருந்து விலகுவதில்லை என்பதுதான் உண்மையான விஷயம்”
இதையும் படிங்க : இந்திய அணிக்காக.. இந்த ஆஸி ப்ளேயரா நான் விளையாடனும்.. அதுக்கு இதுதான் முக்கிய காரணம் – ரவி சாஸ்திரி பேட்டி
“இந்திய அணியில் தற்போது உண்மையாக என்ன நடந்திருக்கிறது என்றால் ரோஹித் சர்மா ஓய்வெடுக்கவில்லை, அவர் கைவிடப்பட்டு இருக்கிறார். அவரை விளையாடும் அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். ஆனால் வெளிப்படையாக அவர்கள் அறிவிக்கவில்லை. தொழில் வாழ்க்கையில் துரதிஷ்டவசமாக பார்ம் இல்லாமல் போகும்போது ரோஹித் சர்மாவுக்கு நடந்தது நடக்கிறது” என்று கூறியிருக்கிறார்






