இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தற்போது மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தோல்வி கூறித்து அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
நியூசிலாந்து அணி வெற்றி
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட் ஆனதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவிக்க அதற்குப் பிறகு சுதாரித்து விளையாடிய இந்திய அணி 462 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் குவித்தது. அதற்குப் பிறகு 107 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய நியூசிலாந்து அணி 27.4 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்கள் மட்டுமே குவித்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆடுகளத்தின் தன்மையை சரியாக கணிக்கப்பட தவறியதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார். மேலும் தற்போது இந்த போட்டிக்குப் பிறகு அணி விளையாடிய விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
தோல்விக்கான காரணம் குறித்து ரோஹித் சர்மா
இது குறித்து அவர் கூறும் போது “இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் நாங்கள் நல்ல முயற்சி செய்தோம். ஆனால் முதலில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. பேட்டிங்கில் ஒரு ஜோடி தனியாக நிலைத்து நின்று விளையாடியது. நீங்கள் 350 ரன்கள் பின்தங்கி இருக்கும் போது எதை பற்றியும் அதிகம் யோசிக்காமல் பந்தை பார்த்து பேட்டிங் செய்ய வேண்டும். எங்கள் அணியின் பாட்னர்ஷிப்கள் பார்க்க உற்சாகமாக இருந்தது.
இதையும் படிங்க:வெறும் 27.4 ஓவர்.. 36 வருட பெருமைக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூஸி.. இந்திய அணி முதல் டெஸ்டில் தோல்வி
எங்கள் பந்துவீச்சு சற்று பின்தங்கி இருக்கலாம். ஆனால் நாங்கள் முயற்சி செய்த விதம் குறித்து பெருமை அடைகிறோம். சர்ப்ராஸ் மற்றும் ரிஷப் ஆகியோர் பேட்டிங் செய்யும்போது அனைவரும் சீட்டின் நுனியில் இருந்தனர். ரிஷப் பண்ட் சில பந்துகளை விளையாடிவிட்டு அதற்கு பிறகு ஷாட்களுக்கு சென்றார். சர்ப்ராஸ் கான் பேட்டிங்கில் அபார முயற்சி தெரிந்தது. நான் செய்தியாளர் சந்திப்பில் ஆரம்பத்திலேயே ஆடுகளத்தின் தன்மை பற்றி கூறி இருந்தேன். ஆனால் நாங்கள் 46 ரன்களில் ஆட்டம் இழப்போம் என்று தெரியவில்லை. நியூசிலாந்து அணி நன்றாக பந்து வீசியது நாங்கள் அதற்கு பதில் அளிக்க தவற விட்டோம். இது போன்ற விளையாட்டுகளும் நடக்கும். தொடர்ந்து முன்னேறுவோம். நாங்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்து அதற்கு பிறகு நான்கு ஆட்டங்களில் தொடர்ச்சியாக ஜெயித்தோம். எனவே இனி நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் வெற்றி பெற முயற்சிப்போம். நம் ஒவ்வொருவரிடமிருந்தும் என்ன தேவை என்று நன்கு அறிவோம்” என்று கூறியிருக்கிறார்.






