ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் எட்டு விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய வெற்றிக்கு காரணமாக இருந்து கேப்டன் பும்ரா ஆட்டநாயகன் விருது வென்றார். வெற்றிக்குப் பிறகு அதற்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 150 ரன் இரண்டாவது எண்ணில் மீண்டு வந்து ஆறு விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 104 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 238 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆக இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் ஆகி இருந்தது.இதன் காரணமாக இந்திய அணியின் தன்னம்பிக்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்திய அணியை சுற்றி நிறைய எதிர்மறையான பேச்சுகள் இருந்தன. மேலும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிவேகமான ஆடுகளத்தை கொண்ட பெர்த் மைதானத்தில் ஆரம்பித்தது. எனவே பல நெருக்கடி மற்றும் அழுத்தத்திற்கு நடுவே முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வென்று இருக்கிறது.
இந்த வெற்றி குறித்து பேசி இருக்கும் கேப்டன் பும்ரா கூறும் பொழுது “முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் இன்னிங்ஸில் நாங்கள் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளானோம். ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து பதில் அளித்த விதம் பெருமையாக இருக்கிறது. இங்கு 2018 ஆம் ஆண்டு விளையாடிய அனுபவம் இருந்தது. முதலில் ஆடுகளம் இங்கும் மென்மையாகவும் போகப்போக வேகம் அதிகமாகவும் இருக்கும். இதை நான் நம்பியிருந்தேன்”
“ஆனால் என் நம்பிக்கைக்கு எதிராக இந்த முறை ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது. நாங்கள் இந்த தொடருக்கு மிகவும் நல்ல முறையில் தயாராகி இருந்தோம். எனவே எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களது செயல்முறை மற்றும் திறன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என நான் அவர்களுக்கு கூறியிருந்தேன். உங்களுக்கு அனுபவம் முக்கியமானது. ஆனால் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் குறிப்பிட்ட நாளில் ஏதாவது செய்ய முடியும்”
இதையும் படிங்க : முதல் நாள் அது மட்டும் நடந்திருந்தா கதையே வேற.. நாங்க இனி இதைத்தான் செய்வோம் – கம்மின்ஸ் பேட்டி
“எங்கள் அணியிடம் இதற்கு மேல் எதுவும் கேட்க முடியாது. பொதுவாக ஜெய்ஸ்வால் ஆக்ரோஷமாக விளையாட கூடியவர். ஆனால் அவர் அணிக்காகவும் சூழ்நிலைக்காகவும் பந்துகளை விட்டு விளையாடினார். இது அவருடைய சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஆக இருக்கலாம். விராட் கோலியை நான் எப்பொழுதும் ஃபார்ம் இல்லாமல் பார்த்தது இல்லை. கடினமான ஒரு ஆடுகளத்தில் ஒரு பேட்ஸ்மேன் ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாது. விராட் கோலி வலையில் சிறப்பாக இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.