இந்திய கிரிக்கெட்

இது கம்பீர் காலம்.. நேத்து நடந்த அந்தவொரு சம்பவம்.. இனி தொடர்ந்து நடக்கும் – பவுலிங் கோச் சாய்ராஜ் பஹதுலே பேட்டி

நேற்று இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய அந்த போட்டி ஆச்சரியப்படுத்தும் விதமாக டை ஆனது. இந்த நிலையில் இந்த போட்டி குறித்தும் எதிர்கால இந்திய அணியின் பயணம் குறித்தும் இந்திய அணியின் இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளரான சாய்ராஜ் பஹதுலே பேசியிருக்கிறார்.நேற்று இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய அந்த போட்டி ஆச்சரியப்படுத்தும் விதமாக டை ஆனது. இந்த நிலையில் இந்த போட்டி குறித்தும் எதிர்கால இந்திய அணியின் பயணம் குறித்தும் இந்திய அணியின் இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளரான சாய்ராஜ் பஹதுலே பேசியிருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருக்க சிவம் துபே மூன்றாவது வேகப் பந்துவீச்சுக்கான பந்துவீச்சாளராக சேர்க்கப்பட்டார். ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த காரணத்தினால் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று ஆட்டத்தின் 32வது ஓவரில் திடீரென சுப்மன் கில் பந்து வீச அழைக்கப்பட்டார். அந்த நேரத்தில் அது எல்லோருக்கும் ஆச்சரியமானதாக இருந்தது. மேலும் அந்த ஓவரில் அவர் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் உடன் மொத்தம் 14 ரன்கள் கொடுத்தார். கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் இருந்து சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், ரியான் பராக் மற்றும் கில் என தொடர்ந்து பகுதிநேர பந்துவீச்சாளர்கள் பந்து வீசவைக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹதுலே பேசும் பொழுது ” எங்களுடைய பேட்டர்களும் நல்ல பந்துவீச்சாளர்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களுடைய முதன்மை திறன் அவர்களுடைய பேட்டிங்தான். எனவே அவர்கள் தங்களுடைய பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இதனால் அவர்கள் பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. ஆனால் அவர்களிடம் நல்ல பந்து வீசும் திறமை இருக்கிறது.

- Advertisement -

அவர்கள் நிறைய பந்து வீசி பயிற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் வாய்ப்புகள் கொடுக்கப்படும். டி20 தொடரில் சூரியகுமார் மற்றும் ரிங்கு சிங் பந்துவீசி இந்தியாவை வெற்றி பெற வைத்தார்கள். இந்த வகையில்தான் கில் பந்து வீச வைக்கப்பட்டார். நிச்சயமாக இனி ஒரு ஆல் ரவுண்டு விளையாட்டாக இருக்கும்.

இதையும் படிங்க : 2வது ODI.. நாளை உத்தேச இந்திய பிளேயிங் XI.. அந்த முக்கிய மாற்றம் நடக்குமா.. 27 வருட பெருமை நிலைக்குமா?

உங்களுடைய பேட்டிங் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருந்து யாராவது ஒருவர் பந்து வீசினால் உங்களுக்கு அது பெரிய உதவியாக அமையும். மேலும் சூழ்நிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப நாம் பகுதிநேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.இப்படி பந்து வீச வரக்கூடிய ஒருவர் முழுநேர பேட்ஸ்மேனாக இருக்கும் பொழுது அது எதிரணிக்கு ஒரு ஆச்சரியமான அம்சமாக இருக்கும். எனவே பகுதிநேர பந்துவீச்சாளர்களுக்கு இனி அணியில் வேலை இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by