2வது ODI.. நாளை உத்தேச இந்திய பிளேயிங் XI.. அந்த முக்கிய மாற்றம் நடக்குமா.. 27 வருட பெருமை நிலைக்குமா?

0
2517
ICT

இந்திய அணி தற்போது இலங்கையில் அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று ஆச்சரியப்படுத்தும் விதமாக டை ஆனது. மேலும் ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு மிக சாதகமாக இருக்கிறது. எனவே நாளை இரண்டாவது போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவனில் மாற்றங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.

இந்திய அணியில் நேற்று மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் இவர்களுடன் சிவம் துபே என ஆறு பந்துவீச்சு ஆப்ஷன்கள் இருந்தன. இந்த முறை பவுலிங் யூனிட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த பயிற்சியாளர் கம்பீர் விரும்பலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

நேற்றைய போட்டியை எடுத்துக் கொள்ளும் பொழுது இலங்கை அணியில் இருந்த இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து மொத்தம் பத்து ஓவர்கள் மட்டுமே பந்துவீசி இருந்தார்கள். மீதமருந்த எல்லா ஓவர்களையும் சுழல் பந்துவீச்சாளர்கள் வீசினார்கள்.

எனவே இந்த அடிப்படையில் எடுத்துக் கொள்ளும் பொழுது சிவம் துபே பகுதிநேர சுழல் பந்துவீச்சாளரான ரியான் பராக் பிளேயிங் லெவனில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இல்லையென்றால்வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் ரியான் பராக் விளையாடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

- Advertisement -

சுழல் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளத்தில் வாஷிங்டன் சுந்தர் கொடுக்கக்கூடிய தாக்கத்தை ரியான் பராக் வந்து விட்டாலும் கொடுக்க முடியும். ஆனால் வாஷிங்டன் சுந்தர் பவுலிங் ஆல்ரவுண்டர், ரியான் பராக் பேட்டிங் ஆல்ரவுண்டர். எனவே ரியான் பராக் வருவதின் மூலம் பேட்டிங் இன்னும் வலிமையாக மாறும்.

இல்லையென்றால் சிவம் துபே மிதவேக பந்துவீச்சு தேவைப்படாத நிலையில் அவருடைய இடத்திற்கு ரியான் பராக் விளையாட வைக்கப்படலாம். குறிப்பாக மூன்று ஒரு நாள் போட்டிகளுமே ஒரே மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் இலங்கையின் நாடுகளும் முற்றிலும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக மட்டுமே இந்திய அணிக்கு எதிராக இருக்கும். எனவே இந்த மாற்றங்கள் நாளை நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் இந்திய அணி 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கையிடம் இழந்தது கிடையாது. 27 வருட அந்த பெருமையை இந்திய அணி காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதையும் படிங்க : ரோச் ரிட்டன்.. ஆர்சிபி வீரருக்கு டாட்டா.. வெஸ்ட் இண்டீஸ் அறிவித்த மாஸ் அணி.. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, சுக்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், ரியான் பராக், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ்.

- Advertisement -