கம்பீரும் நானும் சேர்ந்து.. இந்த பேட்ஸ்மேனுக்கு திருப்புமுனையை உண்டாக்காம விடமாட்டோம் – அபிஷேக் நாயர் பேட்டி

0
199
Abhishek

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் குறிப்பிட்ட ஒரு இந்திய வீரரின் பேட்டிங்கில் கம்பீரும் தானும் சேர்ந்து திருப்புமுனையை கட்டாயம் உருவாக்குவோம் என்று கூறியிருக்கிறார்.

நாளை இந்தியா பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பான சம்பிரதாய பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்ட அவர் சில முக்கிய சில விஷயங்கள் குறித்து பேசி இருந்தார். தற்போது கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர் குழுவில் புதிய பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டியின் சாதக பாதகங்கள்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவருமே சரியான பங்களிப்பை கொடுத்திருந்தார்கள். ஒருபடி மேலே சென்று ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இந்திய பேட்டிங் யூனிட் எடுத்துக் கொள்ளும் பொழுது மூத்த வீரர்களான ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் மூவருமே ஏமாற்றம் தந்திருந்தார்கள். அதே சமயத்தில் இளம் வீரர்களான ஜெய்ஸ்வா,ல் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் மூவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

- Advertisement -

நாங்கள் திருப்புமுனையை உண்டாக்குவோம்

இந்த நிலையில் கேஎல்.ராகுல் பேட்டிங் குறித்து பேசி இருக்கும் அபிஷேக் நாயர் “நீங்கள் இந்திய அணிக்காக விளையாடும் பொழுது தனியாக உங்களுக்கு ஒரு உத்வேகம் தேவைப்படாது. சில சமயங்களில் உங்களுக்கு ஒரு திசை காட்டுவது மட்டுமே தேவையாக இருக்கும்.நான் கேஎல்.ராகுலுக்கு இது தேவை என்று நினைக்கிறேன். மேலும் கடந்த சில நாட்களாக நான் அவருடன் இருந்ததில் அவர் எதையும் புரிந்து கொள்ளக் கூடியவர் என்று உணர்கிறேன்”

“ஒரு வீரர் தனக்கானதை கண்டுபிடிக்கும் நேரங்கள் இருக்கின்றன. கே.எல்.ராகுல் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணிக்காக சிறந்த முறையில் பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார். நான் மற்றும் கம்பீர் பாய் இருவரும் சேர்ந்து, கேஎல்.ராகுலுக்காக ஒரு திருப்புமுனையை உண்டாக்க முடியும் என்று நிச்சயம் நம்புகிறேன்”

இதையும் படிங்க : நான் கிடையாது.. தோனிதான் பெஸ்ட் விக்கெட் கீப்பர்.. காரணம் இதுதான் – ஆடம் கில்கிறிஸ்ட் ஒப்புதல்

“பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்த விதம் நாங்கள் விரும்பியது போல இருந்தது. அவருக்கு நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய நிறைய வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் அவரது அணுகுமுறை சிறப்பாக அமைந்திருந்தது. அவரிடம் இருக்கும் எதிர்பார்ப்புகள் அவருடைய பர்பாமன்ஸ் உடன் ஒத்துப் போகும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -