நான் கிடையாது.. தோனிதான் பெஸ்ட் விக்கெட் கீப்பர்.. காரணம் இதுதான் – ஆடம் கில்கிறிஸ்ட் ஒப்புதல்

0
313
Dhoni

விக்கெட் கீப்பிங்கில் பேட்ஸ்மேன் களில் அதிக ரன்கள் குவித்த உலகச்சாதனை விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்ட் மகேந்திர சிங் தோனிதான் தன்னைவிட சிறந்த விக்கெட் கீப்பர் என கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் இருவரும் கலந்து கொண்டு பல சுவாரசியமான கேள்விகளுக்கு சரியான ஆகவும் சில நேரங்களில் பெருந்தன்மையாகவும் பதிலளித்திருந்தார்கள்.

- Advertisement -

ஆடம் கில்கிறிஸ்ட் ஏற்படுத்திய மாற்றம்

சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களை ஆடம் கில்கிறிஸ்டுக்கு முன் பின் எனப் பிரிக்கலாம். ஏனென்றால் அவரது வருகைக்கு முன்னால் விக்கெட் கீப்பர்கள் விக்கெட் கீப்பிங் பணியை சிறப்பாக செய்தால் அதற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும். விக்கெட் கீப்பர் பேட்டிங் செய்வதை பற்றி கண்டுகொள்ள மாட்டார்கள்.

இந்த நேரத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட் கீப்பராக வந்து பேட்டிங்கில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பாக விளையாட, உலக கிரிக்கெட் நாடுகள் தங்கள் அணியிலும் அப்படி ஒரு பேட்டிங் செய்யக்கூடிய விக்கெட் கீப்பர் தேவை என்பதை உணர்ந்தன. இதற்குப் பிறகுதான் குமார் சங்கக்கரா மற்றும் மகேந்திர சிங் தோனி போன்ற சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் வந்தார்கள். இந்த விஷயத்தில் கிரிக்கெட் உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஆடம் கில்கிறிஸ்ட்!

- Advertisement -

தோனிதான் சிறந்த விக்கெட் கீப்பர்

ஆடம் கில்கிறிஸ்ட் கலந்து கொண்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மொயின் கான் மற்றும் இலங்கையின் ரமேஷ் கலுவிதரனா இருவரில் யார் சிறந்தவர்? என்கின்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு ஆடம் கில்கிறிஸ்ட் இலங்கையின் ரமேஷ் கலுவிதரனாவை தேர்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் ஆன்டி பிளவர் மற்றும் இந்திய விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி இருவரையும் வைக்கப்பட்ட பொழுது ஆடம் கில்கிறிஸ்ட் யோசிக்காமல் மகேந்திர சிங் தோனியை தேர்ந்தெடுத்தார். மீண்டும் அவருடைய பெயரை மகேந்திர சிங் தோனியுடன் இணைத்து கேட்கப்பட்ட பொழுதும் யோசிக்காமல் மகேந்திர சிங் தோனி பெயரையே தேர்ந்தெடுத்தார்.

இதையும் படிங்க : இந்திய அணியை தோற்கடிக்க முடியாது.. காரணத்தை அந்த 4000 நாட்கள் சொல்லும் – பங்களாதேஷ் ஷாகிப் அல் ஹசன் பேட்டி

இதுகுறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறும்பொழுது “தோனிதான் என்னை விட சிறந்த விக்கெட் கீப்பர். அவர்தான் எப்பொழுதும் சிறந்த விக்கெட் கீப்பர். ஏனென்றால் அவர் விக்கெட் கீப்பராக மட்டுமில்லாமல் கேப்டனாக எல்லா கோப்பைகளையும் தூக்கி இருக்கிறார்” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.

- Advertisement -