முதல் சதத்திலேயே விராட் கோலி சாதனையை நெருங்கிய ஷுப்மன் கில்.. டி20ல் இப்படியொரு ரெக்கார்ட் படைத்த இரண்டாவது இந்திய வீரர்!

0
3085

மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலியின சாதனையை நெருங்கியுள்ளார் ஷுப்மன் கில்.

மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி மோதின. வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் டிசைடர் போட்டியில் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்றார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஷுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்கள் விலாசினார். அடுத்த அதிகபட்சமாக ராகுல் திரிப்பாதி 22 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார். ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை கொடுக்க, இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்களை 20 ஓவர்களில் அடித்திருந்தது.

235 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆட்டம் இழந்து வந்தனர். வெறும் 21 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. அப்போதும் கீழ் வரிசையில் இருக்கும் வீரர்கள் முனைப்போடு விளையாடாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க 66 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியும் பெற்றிருக்கிறது.

இப்போட்டியில் சதம் அடித்த ஷுப்மன் கில் புதிய சாதனை படைத்திருக்கிறார். அதாவது டி20 போட்டிகளில் எதிரணிகள் அடித்த ஸ்கோரை விட அதிக ஸ்கோர் அடித்து, விராட் கோலி இருக்கும் சாதனை பட்டியலில் சேர்த்திருக்கிறார். கோலிக்கு அடித்தபடியாக இதை செய்து காட்டிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஷுப்மன் கில்

- Advertisement -

விராட் கோலி, ஆசியக்கோப்பை தொடரில் ஆப்கனிஸ்தான் அணிக்கு எதிராக 122 ரன்கள் விளாசினார். அப்போது ஆப்கானிஸ்தான் அணி 111 ரன்கள் மட்டுமே அடித்தது. தற்போது ஷுப்மன் கில் 126 ரன்கள் அடித்திருந்தார். நியூசிலாந்து அணி 66 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.