“இந்திய பேட்ஸ்மேன்களை எல்லா நேரத்திலும் கன்ட்ரோல் பண்ண முடியாது.. ட்ரை பண்றேன்!” – ஆஸி பவுலர் ஓபன் ஸ்பீச்!

0
4434
ICT

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்பொழுது சூரியகுமார் யாதவ் தலைமையில் விளையாடி வருகிறது.

இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு மொத்தமாக ஓய்வு கொடுக்கப்பட்டது போல, ஆஸ்திரேலியா அணியிலும் சில முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் ஹெட், மேக்ஸ்வெல் போன்ற அதிரடியான பேட்ஸ்மேன்கள் இருக்க செய்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே இரண்டு நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

நாளை இரு அணிகளுக்கும் இடையே திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி நடக்க இருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக திருவனந்தபுரத்தில் மழை பெய்து வருகின்ற காரணத்தினால், நாளைய போட்டி நடக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெகரன்ட்டாப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறும் பொழுது “இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறந்த வீரர்கள். அவர்களுக்கு எதிராக நாம் ஒரு படி மேலே இருப்பதற்கு சில நேரம் மிகவும் கடினமாக இருக்கும். அவர்களை நாம் ஒரு யூகத்தில் மட்டும் வைத்திருக்கலாம். மேலும் நாங்கள் எங்கள் லைன் மற்றும் லென்த்தில் மாற்றங்கள் செய்யலாம்.

- Advertisement -

நான் இந்தியாவில் விளையாடும் போதெல்லாம் பந்து நன்றாக ஸ்விங் ஆகிறது. அதுதான் என்னுடைய பலம் எனவே நான் அதில் ஒட்டிக் கொள்கிறேன். ஆரம்பத்தில் அதன் மூலம் நான் விக்கெட்டுகள் எடுக்க முயற்சி செய்கிறேன்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் பந்தில் ஸ்விங் இருக்கிறதா என்று ஆரம்பத்தில் பார்க்க வேண்டும். அடுத்து நான் லைனில் நேராக இருக்க முயற்சி செய்கிறேன். ஏனென்றால் இந்தியாவில் சிறிது தவறு செய்தாலும் பந்து பவுண்டரி எல்லைக்கு ஓடிவிடும்.ஆடுகளம் எப்படி இருக்கிறது, எந்த இடங்களில் கிரிப் ஆகிறது என்பதை பொறுத்து நான் வேரியேஷன் முயற்சி செய்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!