இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் இளம் வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டி, ஆஸ்திரேலியா வீரர் தன்னை வேண்டுமென்றே வம்பு இழுத்ததாக சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நிதிஷ்குமார் ரெட்டி, கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு இடம் கிடைத்தது. அந்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்திக் கொண்ட அவர் சதம் அடித்த தனது அபார திறமையை வெளிப்படுத்தினார். இறுதியில் இந்திய அணி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை இழந்தது.
இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணியில் தன்னுடன் விளையாடும் சக வீரரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிராவிஸ் ஹெட், ஒரு போட்டியில் இரவு விருந்துக்கு நான் செல்ல மாட்டேன் என்று தெரிந்தும் போட்டியிலிருந்து என் கவனத்தை திசை திருப்ப, ட்ராவிஸ் ஹெட் முயற்சித்ததாக நிதீஷ் குமார் ரெட்டி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது டிராவிஸ் என்னிடம் வந்து நித்திஷ், இன்று இரவு எங்கே பார்ட்டிக்குப் போகிறாய்? என்று கேட்டார். நான் போக மாட்டேன் என்று அவருக்கு நன்றாக தெரிந்திருந்தாலும் விடாமல் என்னிடம் பேசினார். ஆஸ்திரேலியா ஒரு சிறந்த இடம், மெல்போன் ஒரு அற்புதமான நகரம். எனவே நீ அங்கு சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறினார். அவர் என் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்தார்.
இதையும் படிங்க:என்னால இதை செய்ய முடியும்னு அவர்தான் நம்ப வைக்கிறாரு.. ஒரு கேப்டனா பெரிய ஆதரவு இருக்கு – ஸ்ரேயாஸ் ஐயர்
அப்போது நான், அவரிடம் ‘சரி டிராவிஸ் ஒருநாள் நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய் பார்ட்டி பண்ணுவோம்’ என்று கூறினேன். மற்றொரு போட்டியின் போது அவர் ஷார்ட் லெக் திசையில் நான் பந்தை அடிப்பதற்கு தகுந்த இடத்தில் நின்று பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் என்னிடம் நித்திஷ் நீ என்னை அடித்தால், நீ பந்து வீசும் போது நான் உன்னை அடிப்பேன் என்று எச்சரித்தார்” என்று நிதிஷ்குமார் ரெட்டி கூறி இருக்கிறார். நித்திஷ் அடுத்ததாக நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது