ஜெய்ஸ்வால் அதிரடி சதம்.. மிரள வைக்கும் ஹாட்ரிக் சாதனை.. யாரும் செய்ய முடியாத காரியம்.. இங்கிலாந்து அணி திணறல்

0
458
Jaiswal

இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹெட்டி மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க இளம் ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல்.ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 91 பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். கே எல் ராகுல் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

கேப்டன் கில் அதிரடி

ஒருமுனையில் பொறுமையாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்தார். இன்னொரு முனையில் நான்காவது இடத்தில் களம் இறங்கிய கேப்டன் வில் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்து அசத்தினார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 100 ரன் பார்ட்னர்ஷிப்பை தாண்டியது.

இந்த நிலையில் சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வாலுக்கு கையில் கிராம்ப் ஏற்பட்டது. ஆனாலும் வலியை பொறுத்துக் கொண்ட ஜெய்ஸ்வால் தொடர்ந்து பவுண்டரிகளாக அடித்து, தனது ஐந்தாவது சர்வதேச டெஸ்ட் சதத்தையும் இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் சதத்தையும் அடித்து அசத்தினார்.

- Advertisement -

ஹாட்ரிக் சம்பவம்

ஜெய்ஸ்வால் முதன் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சதம் அடித்து அசத்தினார். மேலும் ஆஸ்திரேலியா சென்ற அவர் முதல் போட்டியிலேயே பெர்த் மைதானத்திலும் சதம் அடித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் இங்கிலாந்து மண்ணில் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது அசத்தியிருக்கிறார். இந்தியாவுக்கு வெளியே மூன்று நாடுகளில் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஜெய் ஸ்வால் சதம் அடித்த சாதனையை படைத்திருக்கிறார். மேலும் இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ஐந்தாவது இந்திய பேட்ஸ்மேன் ஆகவும் மாறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : யாருயா நீ?.. கில் என்கிட்ட முன்னவே சொல்லு.. நான் இப்படிதான்.. ஜெய்ஸ்வால் களத்தில் மாஸ் சம்பவம்

இதைத் தொடர்ந்து இந்திய முதல் டெஸ்ட் முதல் நாளில் தேநீர் இடைவேளையின் போது இரண்டு விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து இருக்கிறது. ஜெய்ஸ்வால் 100 ரன்கள், கேப்டன் கில் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -