உலக டெஸ்ட் பைனல் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வரும் இந்திய ஆஸ்திரேலிய வீரர்கள்; காரணம் என்ன?

0
628
Wtc2023

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தற்பொழுது துவங்கி நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாகவும், சூழ்நிலையும் அதேபோல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியில் பந்துவீச்சாளர்களாக முகமது சமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சர்துல் தாக்கூர், ஜடேஜா ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். விக்கெட் கீப்பராக கே.எஸ் பரத் இருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணியிலும் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளர் மட்டுமே இருக்கிறார். ஸ்டார்க், கம்மின்ஸ் உடன் போலன்ட் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். நாதன் லயன் சுழற் பந்துவீச்சிலும், வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக கேமரூன் கிரீனும் இருக்கிறார்கள்.

நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்திய ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது கைகளில் கருப்பு பட்டையை அணிந்து விளையாடி வருகிறார்கள். தற்பொழுது இதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு இந்தியாவையே உலுக்கிய விபத்தாக ஒடிசா பாலசோர் ரயில் விபத்து அமைந்தது. இந்த ரயில் விபத்தில் 275 பேர் இறந்தும், 1119 பேர் காயமடைந்தும் இருக்கிறார்கள்.

தற்பொழுது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய ஆஸ்திரேலிய வீரர்கள் இதற்கு தங்களது சோகத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலையும் தெரிவிக்கும் வகையில் கையில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள்.

இந்திய அணி வீரர்கள் மட்டும் இல்லாது ஆஸ்திரேலியா அணி வீரர்களும் இந்தச் சோகத்தில் பங்கெடுத்து இருப்பது விளையாட்டில் மனிதாபிமான செயலாகப் பலராலும் பார்க்கப்படுகிறது!