பும்ரா நீக்கப்பட்ட பின்.. துணை கேப்டனே இல்லாத இந்திய டெஸ்ட் அணி.. காரணம் இதுதான் – அபிஷேக் நாயர் விளக்கம்

0
158
Jasprit bumrah and Abhishek nayar

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி துணை கேப்டன் இல்லாமல் அடுத்த டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக பதவி வகித்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு ரோகித் சர்மா மட்டுமே கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய நிலையில் அப்போதைய இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆகவும், பந்துவீச்சாளர் பும்ரா துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் இதற்கு முன்னதாக இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த போது ரோகித் சர்மா உடல்நிலை சரியில்லாமல் வெளியேற, ஒரு டெஸ்ட் போட்டிக்கு மட்டும் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா தலைமை தாங்கினார்.

இந்த சூழ்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா மட்டுமே கேப்டனாக செயல்படும் நிலையில் ஏற்கனவே துணைக் கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருந்த பும்ரா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக யாரையும் துணை கேப்டனாக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ஆன அபிஷேக் நாயர் இதன் தெளிவான விளக்கத்தை தற்போது கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “தற்போதைய இந்திய அணியில் நிறைய ஐபிஎல் கேப்டன்கள் விளையாடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய இளம் வீரர்களான கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை பற்றி பேசும்போது ஜெய்ஸ்வால் அவர்களோடு முன்னேறி செல்கிறார். ஐபிஎல் உரிமைகளை வழிநடத்திய வீரர்கள் நிறைய பேர் இங்கு இருக்கிறார்கள். இந்திய வீரர்களை இனி இளைஞர்களாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

அடிப்படையில் இளம் வீரர்கள் மனரீதியாக தெளிவான மனநிலையில் பக்குவப்பட்டு இருக்கின்றனர். எனவே இத்தகைய வீரர்களுக்கு துணை கேப்டன் என்பது அவசியம் கிடையாது என்று நினைக்கிறேன். மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் விராட் மற்றும் ரோகித் போன்றவர்கள் இருப்பதால் அவர்களிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள முடியும். மேலும் இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பான இளைஞர்களின் கைகளில் இருப்பதாக உணர்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் பும்ராவுக்கு அடுத்ததாக நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முக்கிய டெஸ்ட் தொடர்கள் இருப்பதால் அவருக்கு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்கதேசம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்ததால் பும்ராவிற்கு ஓய்வு கொடுத்து அதிக முயற்சி எடுக்க இந்திய அணி விரும்பவில்லை. இதனால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த காரணத்தால் துணைக் கேப்டன் பதவி அவருக்கு வழங்கப்படாமல் இருக்கிறது என்று பிசிசிஐ முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -