மீண்டும் 2 மாற்றங்கள்.. நாங்க பயப்பட மாட்டோம்.. அதே சமயத்தில் இப்படி இருக்கிறதும் முக்கியம் – சூரியகுமார் யாதவ் பேச்சு

0
105
Surya

2026 நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. மேலும் டாஸ் நிகழ்வின்போது சூரியகுமார் யாதவ் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

தற்போது இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக விளையாடி வருகின்றன. இந்த தொடரில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

நியூசிலாந்து அணியில் மாற்றம்

கடந்த இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 208 ரன்கள் குவித்தது. எனவே அவர்கள் இரண்டாவது போட்டியை வெல்வதற்கு நல்ல வாய்ப்புகள் இருந்தது. ஆனால் அந்த போட்டி இந்தியாவின் பக்கம் வருவதற்கு மிக முக்கியமான காரணமாக மூன்றாவது ஓவரை வீசிய போல்க்ஸ் இருந்தார். அவர் அந்த ஓவரில் மொத்தம் 24 ரன்கள் கொடுத்தார்.

இந்த நிலையில் அவரை நீக்கிவிட்டு தற்போது அவருடைய இடத்திற்கு ஜேமிஷன் கொண்டுவரப்பட்டிருக்கிறார். இன்றைக்கு விளையாடும் நியூசிலாந்து பிளேயிங் லெவன் உலக கோப்பையில் களம் இறங்குவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் இரண்டு மாற்றங்கள்

இன்று இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அர்ஸ்தீப் சிங் இடத்திற்கு பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி இடத்திற்கு ரவி பிஸ்னாய் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்திய அணி தங்களிடம் இருக்கும் எல்லா வகையான பிளேயிங் லெவனையும் களம் இறக்கி விளையாட முயற்சி செய்வது தெரிகிறது. இந்தப் போட்டிக்கும் காயமடைந்த அக்சர் படேல் திரும்பவில்லை.

இதையும் படிங்க : 133 ரன்.. பிக்பேஷ் லீக்கில் வரலாற்று சாதனை.. மார்ஸ் அணி சாம்பியன்.. ஸ்மித் பைனலில் சொதப்பல்.. பரிதாப தோல்வி

டாஸ் நிகழ்வில் சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது ” நாங்கள் முதலில் பந்து வீச போகிறோம். விக்கெட் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் பனிப்பொழிவு பின்னால் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. பயமின்றி இருங்கள். உங்கள் சொந்த முடிவை எடுத்து மகிழ்ச்சியாக விளையாடுங்கள் அதே நேரத்தில் பணிவாகவும் இருங்கள். மேலும் அர்ஸ்தீப் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பும்ரா மற்றும் ரவி பிஸ்னாய் இருவரும் வருகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -