47 பந்து 77 ரன்.. மந்தனா படைத்த அபார 2 சாதனை.. வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20.. இந்திய அணி சிறப்பான வெற்றி

0
427

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

- Advertisement -

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மூன்றாவது டி20

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது. எனவே தொடரை நிர்ணயிக்கப் போகும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அபாரமாக விளையாடி 47 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 77 ரன்கள் குவித்தார்.

இதற்கு அடுத்ததாக ஜெமிமா 39 ரன்கள் மற்றும் ரிச்சா கோஷ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஐந்து சிக்சர் என 54 ரன்கள் குவித்தார். இதில் கேப்டன் மந்தனா தனது 30வது அரை சதம் அடித்ததன் மூலமாக அதிக அரை சதங்கள் அடித்த நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்சின் சாதனையை முறியடித்தார். மேலும் அது மட்டுமல்லாமல் ஒரு காலண்டர் ஆண்டில் மகளிர் கிரிக்கெட்டில் டி20யில் 763 ரன்கள் குவித்ததன் மூலமாக அதிக ரன்கள் குவித்த இலங்கை வீராங்கனை சமாரி அத்தப்பத்துவின் 720 ரன்கள் சாதனையை முறியடித்தார்.

- Advertisement -

ஸ்மிருதி மந்தனா படைத்த 2 அபார சாதனை

இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை ஹீலி 17 பந்தில் 22 ரன், மூன்றாவது வரிசை வீராங்கனை டோட்டின் 17 பந்தில் 25 ரன் அடிக்க மிடில் வரிசை வீராங்கனை ஹென்றி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 16 பந்துகளை எதிர்கொண்டு 3 பௌண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 43 ரன்கள் குவித்தார். ஆனால் மற்ற வீராங்கனைகள் சரியாக ஒத்துழைப்பு தர மறுத்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதியாக 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதையும் படிங்க:தென் ஆப்பிரிக்கா 2வது ஒருநாள்.. தோனியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்.. பாக் குவித்த மெகா இலக்கு

இதனால் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ராதா யாதவ் நான்கு ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார். இது இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -