பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஒரு நாள் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு மிகப்பெரிய ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது.
மேலும் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடிய நட்சத்திர வீரர் பாபர் அசாம் இந்திய முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.
தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் இரண்டாவது ஒருநாள் போட்டி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு நடைபெற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பந்து வீச தென்னாப்பிரிக்க அணி தீர்மானித்தது. பாகிஸ்தான் பேட்டிங் செய்து தொடக்க ஆட்டக்காரர் சபிக் டக் அவுட் ஆகி வெளியேறிய நிலையில் அவருக்குப் பிறகு பாபர் அசாம் ஷைம் அய்யூப் உடன் இன்னிங்ஸ் துவங்க ஆரம்பித்தார். அயூப் 25 ரன்னில் வெளியேற பாபர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 95 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 7 பவுண்டரியோடு 73 ரன்கள் குவித்து சிறப்பான அரை சதம் ஒன்றை பதிவு செய்தார்.
தோனியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்
இவருக்கு அடுத்ததாக ரிஸ்வான் 82 பந்துகளை எதிர்கொண்டு ஏழு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர் என 80 ரன்கள் குவித்தார். இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கம்ரான் குலாம் 32 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் 65 ரன்கள் குவித்தார். இதனால் பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 329 ரன்கள் குறித்தது. இந்த நிலையில் பாபர் அசாம் ஒரு சிறப்பான சாதனையை படைத்து இந்திய ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க:நல்லவேளை ஆஸி தப்பிச்சாங்க.. இவர் மட்டும் இல்லன்னா எங்க டீம் இனி அவ்ளோதான் – பிரட்லீ பேட்டி
அதாவது இந்த போட்டியில் பாபர் அசாம் 73 ரன்கள் குவித்ததன் மூலமாக வெளிநாடுகளில் அனைத்து விதமான போட்டிகளிலும் 38 அரை சதங்கள் அடித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்திருக்கிறார். பாபர் அசாம் வெளிநாட்டில் மொத்தமாக அனைத்து வடிவ கிரிக்கெட் தொடரிலும் 39 அரை சுதங்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.