தற்போது இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பேட் இலங்கை அணி தகுதியற்றது எனவும் அந்த வீரர்கள் விளையாட்டு வீரர்கள் போலவே இல்லை எனவும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இலங்கை அணி இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற பெரிய அணியாக இருக்கிறது. அதே சமயத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஒவ்வொருவராக ஓய்வு பெற்று வந்தார்கள். ஆனால் அவர்களுடைய இடத்திற்கு சரியான மாற்று வீரர்களை உருவாக்க இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் முடியவில்லை.
முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ், சனத் ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கரா மற்றும் மகேல ஜெயவர்த்தன என கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய நட்சத்திர வீரர்களை இலங்கை கிரிக்கெட் உலகத்திற்கு கொடுத்திருக்கிறது. ஆனால் இதற்குப் பின்பு இலங்கை அணி உலகில் எந்த அணியிடமும் தோல்வியடைவதற்கான வாய்ப்பு உள்ள அணியாக மாறி இருக்கிறது.
நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்குபெறும் வாய்ப்பையும் இழந்திருக்கிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் மிக கடுமையான விமர்சனத்தை அந்த அணி மீது வைத்திருக்கிறார்.
இலங்கை அணி பற்றி பேசி உள்ள சல்மான் பட் கூறும் பொழுது “இலங்கை அணி நீண்ட காலமாகத் தகுதியற்ற அணியாக இருந்து வருகிறது. அந்த அணியில் வீரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கவில்லையா? அவர்களில் ஒரு சிலரே பிட்டாக இருக்கிறார்கள். மற்றவர்கள் மிகவும் குண்டாக இருக்கிறார்கள். அந்த அணி பெரும்பாலும் தகுதியற்ற அணியாக இருக்கிறது. அவர்களைப் பார்ப்பதற்கு விளையாட்டு வீரர்களை போல் இல்லை.
இதையும் படிங்க : 10 விக்கெட்.. 24 பந்தில் ஓபனராக பென் ஸ்டோக்ஸ் தனி சாதனை.. வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஸ்.. இங்கிலாந்து அபார வெற்றி
கடந்த ஐந்து முதல் 8 வருடங்களாக உயர்தர டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை இலங்கை உருவாக்கவில்லை. அந்த அணியில் மேட்ச் வின்னர் என்று யாரும் இல்லை. அந்த அணியின் ஜெயவர்த்தன சங்கக்கரா மற்றும் தற்போதைய பயிற்சியாளர் ஜெயசூர்யா ஆகியோர்களுக்கு மாற்று வீரர்களை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் ஒரு கடினமான பாதையில் செல்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






