86 ரன் வித்தியாசம்.. டி20-ல் புது வரலாறு.. இந்திய அணி பங்களாதேசை வீழ்த்தி தொடரை வென்றது

0
666
Nitish

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இன்று இரண்டாவது போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அடுத்த ஹர்திக் பாண்டியாவின் எழுச்சி

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் 7 பந்தில் 10 ரன்கள், அபிஷேக் ஷர்மா 11 பந்தில் 15 ரன்கள், கேப்டன் சூரியகுமார் யாதவ் 10 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து நிதீஷ் குமார் மற்றும் ரிங்கு சிங் இணைந்து 49 பந்துகளில் 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

நிதீஷ் குமார் ரெட்டி 34 பந்தில் 71 ரன்கள், ரிங்கு சிங் 29 பந்தில் 53 ரன்கள், ஹர்திக் பாண்டியா 19 பந்தில் 32 ரன்கள், ரியான் பராக் 6 பந்தில் 15 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் அணியின் தரப்பில் ரியாத் ஹூசைன் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக கலக்கிய இந்திய பவுலர்கள்

இதற்கு அடுத்து பங்களாதேஷ் அணி பெரிய இலக்கை நோக்கி விளையாட வந்தது. இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், நிதீஷ் குமார் ரெட்டி உள்பட ஏழு வீரர்கள் பந்துவீசினார்கள். இன்று ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பந்து வீசிய ஏழு பந்துவீச்சாளர்களும் விக்கெட் கைப்பற்றி அசத்தினார்கள். இது இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடந்த அரிய நிகழ்வாக பதிவாகி இருக்கிறது.

இதையும் படிங்க : இப்போ இருக்கிற பார்முக்கு.. ஜோ ரூட்டை கட்டுப்படுத்த அந்த இந்திய வீரரால் மட்டுமே முடியும் – மைக்கேல் வாகன் கருத்து

இறுதியாக பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் பந்துவீச்சில் வரும் சக்கரவர்த்தி மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் தல இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள். பங்களாதேஷ் தரப்பில் மகமதுல்லாஹ் அதிகபட்சமாக 39 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -